Posts Tagged ‘தீர்த்தங்கர’

கிரேக்க நிர்வாணத்தின் மூலம் என்ன – தானாகவே தோன்றியதா அல்லது திகம்பர ஜைனத்தின் தாக்கம் உள்ளதா?

ஓகஸ்ட் 29, 2016

கிரேக்க நிர்வாணத்தின் மூலம் என்ன தானாகவே தோன்றியதா அல்லது திகம்பர ஜைனத்தின் தாக்கம் உள்ளதா?

The Greek erotic sculptures

திருமணத்திற்கு வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்வது:  ஐரோப்பிய நாடுகளில், கிருத்துவம் பலாத்காரமாகத் திணிப்பதற்கு முன்பு, மக்கள் இல்லறம் மற்றும் இல்லறம் அற்ற வாழ்க்கையினைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தனர். அனால் “இல்லறம்” என்ற நிலை, அங்கு தட்பவெப்பக் காரணிகளால் மாறுபட்டு இருந்தன. அதாவது “வீட்டு தர்மம்” என்று அவர்கள் பெரிதாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்வது அசாதாரணமான நிகழ்வாகக் கருதப் பட்டது இல்லை. அத்தகை நிலையில் தங்களது எண்ணப்பதிவுகள் கவிதையாக, சித்திரமாக, சிற்பமாக வெளிப்பட்டபோது, அதன் தாக்கங்கள் வெளிப்படையாகவே இருந்தன. கிரேக்க- ரோமானிய நாகரிகங்கள், தாம் அழிந்தாலும், தமது எஞ்சிய சின்னங்களிலும், அகழ்வாய்வு அத்தாட்சிகளிலும் அத்தகைய விவரங்கள் பதிந்து கிடப்பதன் மூலம் அறியலாம்.

Greek and Roman erotica books

சொல்லமுடியாத செக்ஸ் கவிதைகள்: டெக்ளி அகஸ்தாலிக்கு (இத்தாலியில்) செல்லும் வழியில் பாம்பேயில் (Pompei, via Deglki Augustali) உள்ள ஒருவீட்டின் சுவரில் ஆண்குறி சிற்பம் காணப்படுகிறது. இது எதோ ஒரு காக்கும் சின்னம் மாதிரி சதுரம், செவ்வகம் மற்ற வீடு போன்ற வடிவங்களின் நடுவே காணப்படுகின்றது. ஒரு ஆண்குறி-இரு விரைகளுடன் “Hic habitat felicitas” என்ற சொற்களுடன் காணப்படுகிறது[1]. இத்தாலி மொழியிலுள்ள அத்தகைய இலக்கியத்தை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்து எந்த ஆசிரியரும் தமது மாணவனுக்கு விளக்க முடியாத அளவிற்கு அந்த காமக்கவிதைகள் இருந்தன. ஓவிட் (Ovid) மற்றும் லூஸியன் (Lucian) போன்றவர்களின் அத்தகைய கவிதைகள் அலசப்பட்டன. பல “காமலீலைகள் புரியும் முறைகள்” என்ற செயல்முறை புத்தகங்களும் (Sex Manuals) விவரமான படங்களுடன் இருந்தன. உதாரணத்திற்கு பாக்ஸமோஸ் என்பவரின், “காதல் செயல்களில் 12 வகையான கலைகள்” (Twelve Arts of the actions of Love by Paxamos). தூண்டுதல் முறைகள், நிலைகள் முதலியனவற்றை விளக்கும் ஓவிடின் “அர்ஸ் அமதோரியா” (Ars Amatoria) போன்ற துணைபாட நூல்களும் (guides) இருந்தன. ஆனால், இந்நூல்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள்[2] எடுத்துக் காட்டுகின்றனர்!

gREEK SEX SCULPTURE

கிரேக்கர் ஏன் நிர்வாணமாக வாழ்ந்தனர்?: கிரேக்க நாகரிகத்தைப் புகழ்ந்து எழுதி, இந்தியர்களின் மீது திணித்து, இந்தியர்களும் அவ்வாறே அவர்களைப் பற்றி கருத்துருவாக்கம் செய்து கொண்டு, ஆஹா, கிரேக்கர்களுக்குத் தான் என்ன அறிவு, இந்தியர்கள் அவர்களிடமிருந்து கலைகள், விஞ்ஞானங்களைக் காப்பி அடித்து, திருடி பிறகு தான் தனது ஞானத்தைப் பெருக்கிக் கொண்டனர், என்றெல்லாம் இன்று வரை எழுதி வருகின்றனர். ஆனால், ஒரு கிரேக்க மாணவனுக்கே, கிரேக்க விளையாட்டு வீரர்கள் ஏன் அம்மணமாக ஓடினர், விளையாடினர் அல்லது தத்துவ ஞானிகளும் அவ்வாறே இருந்தனர், உரையாடினர், விவாதித்தனர் என்று சரித்திரத்தைச் சொன்னால், புரியாது முழிப்பான் அல்லது வெட்கப்படுவான் அல்லது அத்தகைய நிலை இன்று இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பான்[3].

Greek erotic scene

கிரேக்கரின் நிர்வாணம் காட்டுவது என்ன?: அதுமட்டுமன்றி அவர்கள் குளிப்பதும் வெளிப்படையாகவே வெளியிடங்களில் குளித்தனர்! ஆர்கிமெடிஸ் குளித்துக் கொண்டிருந்தப்போது, உண்மையைக் கண்டுபிடித்ததால், நிர்வாணாமாக தெருவில் ஓடினார்[4] என்று படித்தது ஞாபகத்தில் இருக்கலாம். ஆனால், அவர் ஏன் நிர்வாணாமாக ஓடினார் என்று ஆரும் கேட்டிருக்க மாட்டார்கள்! நிர்வாணத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிர்வாணமாகத்தானே ஓடுவார்கள்? ஆண்களின் நிர்வாணம் (male nudity) மட்டுமன்றி, பெண்களின் நிர்வாணமும் (female nudity) வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.  மூன்றாம் நூற்றாண்டு BCE அளவில், இந்நிலை ஏற்பட்டது. மேலும் இன்று சிம்போசியம் (Symposium), ஜிம்னேஸியம் (Gymnasium), ஜைனேஸியம் (gynaecium) என்றெல்லாம் குறிப்பிட்டால், ஆஹா, இதெல்லாம் அறிவுஜீவிகள் விஷயம் போன்றுள்ளனவே என்று இன்று நினைக்கலாம். ஆனால், இவற்றில் கலந்து கொள்பவர்கள் நிர்வாணமாக இருந்தனர் என்ற உண்மையினைச் சொன்னால், அவ்வாறு இன்று அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப் படுமா என்ற கேள்வி எழும்! ஜிம்னோ (gymno) என்ற கிரேக்கக்கூறு ஜும்னோஸ் (jumnos) என்றாகி அம்மணம், நிர்வாணம், உடையில்லாத நிலை, என்ற பொருளில் வரும். இதைப் பற்றி அலசும் படிப்பு / தத்துவம் ஜிம்னோசோஃபி (Gymnosophy) எனப்படும்.  எனவே, இதுவும் கிரேக்கர்களின் மூலம் ஜைனத்திலிருந்து தான் வந்தது என்று தெரிகிறது.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

அலெக்சாந்தரும், நிர்வாண சந்நியாசிகளும்: “ஜிம்னோபிஸ்ட்”டுகள் (gymnophists) என்றால் ஆடையின்றி திரிபவர், முற்றும் துறந்த சந்நியாசிகள் என்று அறியப் படுகின்றனர். அலெக்ஸ்சாந்தர் “இந்தியாவிற்கு” வந்தபோது, இத்தகைய நிர்வாண சாமியார்களப் பார்த்ததும் “அலேக்காக”த் தூக்கிக் கொண்டு சென்று விட்டான் என்று நமக்குச் சொல்லப்படுகிறது! இதன் பின்னணியை இந்தியர்கள் நிச்சயம் அறிய வேண்டும்.

  1. அலெக்ஸ்சாந்தர் மற்ற கிரேக்கர்கள் எப்படி நிர்வாணமான குதிரைகளின் மீது ஓட்டிக் கொண்டு வந்தனர்?
  2. அவர்களும் நிர்வாணமாக இருந்தனரா இல்லையா?
  3. அலெக்ஸ்சாந்தர் “ஓரினச்சேர்க்கையாளன்” என்பதனால் நிர்வாண சாமியார்களப் பார்த்ததும் “அலேக்காக”த் தூக்கிக் கொண்டு சென்று விட்டானா?
  4. அவன் பல பெண்களுடன் உறவு வைத்திருந்ததன் மர்மம் என்ன?
  5. தாயுடனே சம்பந்தப் படுத்தும் விவரங்களும் உண்டு. அதன் மர்மம் என்ன?
  6. எப்படி, ஏன் அவன் “கடவுளாக்க”ப் பட்டான்?
  7. இதை எல்லாவற்றையும் விட, கிரேக்கர்கள் நிர்வாண வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது, திடீரென்று, எப்பொழுது ஆடை அணிய ஆரம்பித்தனர்?

இந்த கேள்விகளுக்கு பதில்களைப் பெற்றால், பல உண்மைகள் வெளிவரும். இதைத் தவிர, அவன் “இந்தியாவிற்கு” வரவில்லை, தோற்று ஓடி, போகும் வழியிலேயே மாண்டுவிட்டான் என்பதேல்லாம் இங்கு விவரித்தால் பெருகும்[5]. சமீபத்தில் வந்த அலெக்ஸ்சாந்தர் படம் இவ்விவரங்களைக் கொண்டிருந்ததால், கிரேக்க மக்கள் எதிர்த்தனர்.

கிரேக்க செக்ஸ்-3

நிர்வாண கூட்டம், பேச்சு, ஆட்டம், பாட்டம் முதலியன: சிம்போசியம் (Symposium) என்றால் இரவு உணவிற்குப் பிறகு பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் குடிக்கும் வழக்கம் / விழா ஆகும் (ancient Greek after-dinner drinking-party with music, dancers; or conversation – OED, 1931, p.1240). சுருக்கமாகச் சொல்வதென்றால் “இரவு தண்ணிப் பார்ட்டி”. பிறகுதான், தத்துவம் பொன்ற விஷயங்கள் அலசப்பட்ட இடம் என்று மரியாதையான் பொருள் புகுத்தப் பட்டது! (இன்றும் அதுதான் நடக்கிறது என்பது வேறு விஷயம்). ஜிம்னேஸியம் (Gymnasium) என்றால் உடற்பயிற்ச்சிக் கூடம். இங்கும் கிரேக்கர்கள் நிர்வாணமாகத்தான் பங்கு கொள்வர். உதாரணத்திற்கு Palaestra scene என்ற சிற்பத்தைப் பார்க்கவும்[6]. கிரேக்கக் கடவுளர்கள் – ஆண்-பெண், இருபாலரும் மிகவும் அதிகமாக, தாராளமாக மற்றும் அளவிற்கு மீறிய செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டனர் என்று கிரேக்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதனால், அவர்களது சிற்பங்களும் தாராளமாக அவ்வாறே வடிக்கப்பட்டன[7].

© வேதபிரகாஷ்

29-08-2016

A coin, depicting a mythological half-man half-goat and nymph

[1] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982, ப.72.

[2] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982, ப.5.

[3] John Mouratidis, Associate Professor of Physical Education, “The Origin of Nudity in Greek Athletics“, Journal of Sport History, Vol. 12, No. 3 (Winter, 1985). For full text, see at:
http://www.la84foundation.org/SportsLibrary/JSH/JSH1985/JSH1203/jsh1203b.pdf

[4] The naked Archimedes (c 287-212 BC) running through the streets of Syracuse.

[5] K. V. Ramakrishna Rao, The Truth about Alexander, http://www.hinduwebsite.com/history/alexander.asp
…………………………….., The Myth, Romance and Historicity of Alexander and their alleged influence on India, http://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[6] C.E. Robinson, Everyday life in Ancient Greece, Oxford at Clarendon, UK, 1936, p.112

[7] நிர்வாண “ஜேயஸ்”யை இங்கு பார்க்கலாம்: Zeus from Artemisium (c.5th cent. BCE) Robert Graves (Int.), Larousse Encyclopedia of Mythology, Paul Hamlyn, London, 1964, p.104; Apollo, Ibid.p.120; Artemes of Ephesus – Goddesses of fertility showing many breasts, Ibid, p.129. ; Hermes, Ibid.133; Head of Aphrodite, Ibid, p.143, p.144, p.145; Eros and Psyche, Ibid, p.147; Eros,Ibid, p.148; Poseiden, p.150; Three Graces p.150; Attis, p.170 உடையணிந்திருந்தாலும், நடுபகுதியை விலக்கி ஆண்குறியைக்காட்டும் நிலை; Hercules p.190;  இலை மாதிரி ஒன்று செய்யப்பட்டு ஆண்குறி மறைக்கப்பட்டுள்ளது. 131 முழு நிர்வாணம் Castor and Pollux p.227