Posts Tagged ‘செக்ஸ் விரும்பிகள்’

சென்னை நகரத்திலே செக்ஸ்!

திசெம்பர் 10, 2009

பாலியல் பற்றி எப்படியெல்லாம் விளக்கங்கள் கொடுக்கலாம் என்பதற்கு உடனடியாக ஒரு உதாரணம் கிடைக்கிறது.

“சென்னை நகரத்திலே செக்ஸ்” என்று இப்படியொரு செய்தி:

“இந்தியா காமசூத்ராவிற்கு புகழ் பெற்ற நாடு ஆனால் இங்கு சென்னைவாழ் மக்கள் பழங்கலாச்சாரவிரும்பிகளாக இருந்தாலும் நிறைய “மசாலாவிற்கு” அறிமுகமாகிறார்கள்”, என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கிறது.

மூடிய அறைக்குள் ஜோடிகள் எந்த அளவிற்கு புதிய இடங்களை அலசுபவர் மாதிரி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது.  சென்னைவாசிகள், மற்றவரைப் போல இவ்விஷயத்தில் சோதனை செய்யலாம், ஏனெனில் சோதனை யாருக்கும் புதியதல்ல.

சஞ்சய் தாமஸ் என்ற இசைகலைஞர் கூறுகிறார், “படுக்கையறையில் மக்கள் ஏற்கெனவே பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்று நினைக்கிறேன், ஏனனில் மக்கள் தங்களது பிரியமான நோக்கங்களுக்கு திறந்த மனதுடந்தான் உள்ளார்கள். சென்னையில் நாங்கள் மூடிமறைக்கும் பழமைவாதிகளாக இருக்க மாட்டோம். ஆயிரக்கணக்கான வருடங்களாக நாம் செக்ஸை உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம். அதை உருவாக்கும் நோக்கில் செய்கிறோம். எனினும் சில ஜோடிகள் ‘நாங்கள் நேற்றைய இரவில் இப்படி கலவியில் இருந்தோம், 43வது நிலையை முயற்சி செய்து கொண்டிருந்தோம்’ என்று வெளிப்படையாக சொல்லும் அளவில் இல்லை. இருப்பினும் சிலர் அத்தகைய விஷயங்களை பரிமாற்றம் கொள்ள அல்லது விவாதிக்கக்கூடும்.”

கலாச்சாரம் காக்கும் எண்ணமுடையோர் படுக்கையறையில் வெளிப்படையாக இருந்தாலும், வெளியில் அந்த அளவிற்கு விவாதிக்கத் தயங்குகிறார்கள். மார்டினா நிரஞ்சினி என்ற இயக்குனர் கூறுவதாவது, “இப்பொழுது மக்கள் வெளிப்படையாக வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  சென்னை நிச்சயமாக மற்ற நகரங்களைவிட பல ஆண்டுகளுக்குப் பின் தங்கியே உள்ளது. ஏனெனில் மேனாட்டு தாக்கம் இருந்தாலும் சுதந்திர உள்ளுணர்வுகள் வேலை செய்து கொண்டிருக்கும்”.

மேக்தலின் ஜெயரத்னம் என்ற “ஆலோசனை மையத்”தின் நிறுவனர் கூறுவதாவது, “எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு செக்ஸ் மற்றும் இன்பம் முதலியவற்றைப் பற்றிப் பேசும் தன்மை பத்தாண்டுகளாக வளர்ந்துள்ளது. இருப்பினும் செக்ஸ் பற்றிய உரையாடகள், பிரச்சினைகள் ரகசியமாகவே உள்ளன. ஏனெனில் அதைப் பற்றிப் பேசினால், தாங்கள் காமை-இச்சைக் கொண்டவர்கள், அதிகமான செக்ஸ் விரும்பிகள் என்று தவறாக கொள்ளப்படுவார்களோ என்று அஞ்சுகிறார்கள்”.

சென்னையைப் பொருத்தமட்டிலும், அத்தகைய கலாச்சாரத் தடுப்புத் தனமையே செக்ஸ் பற்றி அதிகம் பேசவைக்கக்கூடும் என்கிறார்கள். பெற்றோர்களுக்கே தங்களது குழந்தைகளுடன் / பிள்ளைகளுடன் செக்ஸ் பற்றி எப்படி பேசுவது என்று தெரியவில்லை. இருப்பினும் இன்றைய இளைய தலைமுறை திறந்த மனதுடன் இருக்கிறார்கள். தடுப்பு மற்றும் மறைப்பு போக்கு, செக்ஸில் நிறைய நாட்டத்தை ஏற்படுத்தலாம். அதனால் அதிகமான பரிசோதனைகள் நிகழ்த்தப்படலாம், ஏனெனில் தடுக்கப்படுவதின் மீதுதான் விருப்பம் ஜாஸ்தியாகும். ஆனால், மேக்தலின் சொல்கிறார், “சென்னையிலுள்ளோர் பாரம்பரிய உணர்வுகளுடன் இருப்பதால் அவர்கள் தங்களது உணர்வுகளைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற கருத்துள்ளது. ஆனால் மாறாக, பத்திரிக்கைகளில் நிறையவே விவாதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஆச்சரியமாக இருக்கிறது”.

இவ்வாறு கருத்துகள் வேறுபட்டிருப்பினும், சென்னை முன்னேருகிறது! ஆகவே புதிய பொம்மைக் கடைகளில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு பாருங்கள் (புதிய வரவு ஏதாவது இருக்கலாம்).

இப்படி முற்போக்கு, திறந்தமனத்துடன் விவாதிக்கும் நவீன-செக்ஸ் விரும்பிகள் இருக்கும் வேலையிலே, இப்படியும் கவலைப்படுகிறார்கள்!

புலியின் நிர்வாண புதைப்படம்!

புலியின் நிர்வாண புகைப்படம்!

அமெரிக்காவின் செக்ஸை யாராவது வெல்லமுடியுமா? எனக்குத் தெரியாது!

ஆனால், அந்நாட்டு விளையாட்டு வீரர், கொஞ்சம் அதிகமாக விளையாடிவிட்டதால், மனைவி அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாராம்!

புலியின் மனைவி புலியை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டாள்!

புலியின் மனைவி புலியை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டாள்!

இதெப்படி?