Posts Tagged ‘ஜைனர்’

கிரேக்கரின் ஆண்குறி-பெண்குறி வழிப்பாடுகளின் பின்னணியில் உள்ள உண்மைகள்

ஓகஸ்ட் 29, 2016

கிரேக்கரின் ஆண்குறி-பெண்குறி வழிப்பாடுகளின்  பின்னணியில் உள்ள உண்மைகள்

Greek - phallic - found at Adriatic sea, fano, Italy

நிர்வாணம், துறந்த நிலை, ஆடை அணிந்த நிலை: அப்ரோடைட்ஸ் (Aphrodites) செக்ஸின் கடவுள்.  “aphrodisiasic” என்றால் காமத்தைத் தூண்டி உடலுறவு கொள்ளச் செய்யும் காம-இச்சை (veneral, producing veneral desire). வீனஸ் (Venus) என்ற பெண்கடவுள் குறிக்கப்படும். இதிலிருந்து பல சொற்கள் பெறப்படும், அவையெல்லாம் செக்ஸ் சம்பந்தமாகவே இருக்கும். மொஹம்மது வீனஸை முதலில் வழிபட்டுவந்தார் என்பது கவனிக்கத் தக்கது. இவ்வாறு கிரேக்கர்கள் நிர்வாணத்துடன் அறிவிஜீவிகளாக இருந்ததை இந்தியர்களுக்குச் சொல்வதில்லை. ஆனால், நிர்வாண கிரேக்கர்களிடமிருந்து ஆடைக்கட்டிய இந்தியர்கள் எல்லா கலை-விஞ்ஞானங்களையும் காப்பி அடித்தனர் என்று எழுதிகின்றனர்! ஆகவே, நிர்வாண உலகில், ஆண்குறி-பெண்குறி அவர்களது நினைவுகளை ஆக்கரமித்து, சித்திரங்களாக, சிற்பங்களாக மாறியது வியப்பில்லை. அவர்களைப் பொறுத்த வரைக்கும் உடலியல் மற்றும் ஆன்மீகவியல் ரீதியில் வித்தியாசம் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால், கிருத்துவம் திணிக்கப்பட்ட பிறகு, அத்தகைய “நிர்வாணம்” வேறு விதமாகத் தோன்றியது மர்மமில்லை, ஏனெனில், அவை தமது இறையியலை பாதித்தனால் மறைக்க ஆரம்பித்தனர். அத்தகைய மறைப்பு வேலைகள் தாம் அழிவு வேலைகளில் நிறைவேறியது. பாம்பேயில் அகழ்வாய்வின் போது அத்தகைய பல சிற்பங்கள் உடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆண்குறிகள் இரண்டு விரைகள் கூடிய சிற்பங்கள் மேடைமீது பிரதானமாக வைக்கப்பட்டிருந்தன.

Italian phallic

திகம்பர கோவில், சிற்பங்கள் முதலியவற்றை உண்டாக்கியவர்கள் கிரேக்கரா, கிரேக்கரின் முன்னோடிகளா அல்லது திகம்பர ஜைனர்களா?: டெலோஸ் என்ற இடத்தில் உடைந்த நிலையில் இருந்த அவை “விசித்திரமான சிற்பங்கள்” எனக் குறிப்பிடப் பட்டன. கிரேக்கத் தீவுகளில் ஒன்று ரெலோஸ் [Delos] இங்கு அகழ்வாய்வில் பல சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்கு ஸ்டோய்வடியோன் [Stoivadeion] என்ற கோவில் உள்ளது. இது டையோனிசியஸ் [ Dionysus] என்ற கடவுளுக்கு நிறுவப்பட்டது. இக்கோவிலின் இரண்டு பக்கங்களிலும் பாபோசிலெனோய் [Paposilenoi] என்ற இருவரின் சிலைகள் காணப்படுகின்றன. இருபக்கங்களிலும் உள்ள உயர்ந்த இரு தூண்களின் மீது, பெரிய ஆண்குறி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை உடைந்த நிலையில் காணப்படுகின்றன. பீடத்தின் நான்கு பக்கங்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்வாண கோவில், பெரிய அளவில், ஆண்குறி முதலியவையெல்லாம், அம்மக்கள் அவற்றிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதைக் காட்டுகிறது. அக்கோவில், சிற்பங்கள் முதலியவற்றை உண்டாக்கியவர்கள் கிரேக்கரா, கிரேக்கரின் முன்னோடிகளா அல்லது திகம்பர ஜைனர்களா?

Poseidon throwing a trident (some say Zeus throwing a thunderbolt), more than 2450 years old, fished out of Cape Artemisium in 1928, now an icon of Greece.

கிருத்துவத்தால் கிரேக்க ஆதாரங்கள் அழிக்கப்பட்டனவா?: கிரேக்கத்திலிருந்து பைபிள், தத்துவங்கள் முதலியப் பெற்று இறையியலை வளர்த்து அவ்வாறே அவர்கள் கடவுளர்களையும் தமதாக மாற்றிக் கொண்டதால், பிற்பாடு, ஏசு, மேரி முதலியோர் நிர்வாணமாக இருந்தது பயத்தை உண்டாக்கியது. ஆகையால் தான் அத்தகைய சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மாற்றமுடியும் என்ற நிலையில் உள்ளவை மாற்றப்பட்டன. அதாவது, உடைகள் உடுத்தியிருந்தது மாதிரி செதுக்கப்பட்டன; நிர்வாண ஓவியங்களில் அவற்றை மறைத்து தீட்டப்பட்டன. இருப்பினும் “டின்டின்னாபுலா” (tintinnanabula) என்ற உலோகத்தால் செய்யப்பட்ட தொங்கும் மணிகள் அப்பட்டமாக ஆண்குறியை பிரதானமாக வைத்து வார்க்கப்பட்டது தெரிகின்றது. ஆண்குறியை மெல்லிய சங்கிலி தாங்குகிறது; அதிலிருந்து மணிகள் தொங்குகின்றன; ஆண்குறியே மீன், சிங்கம் மற்ற விலங்குகளின் பின்பகுதி உருவம் (இரண்டு கால், ஒரு வால்) கொண்டு,
முன்பகுதி ஆண்குறியாக உள்ளது; அல்லது, ஒரு மனித ஒருவமே தொங்கவிடப்பட்டு, அவனது ஆண்குறி பெரிதாக செய்யப்பட்டு அதிலிருந்து மணிகள் தொங்கவிடப்பட்ட நிலை; இதைத் தவிர வாயினுள் உள்ளது மாறிய ஆண்குறிகள் (அவை முகமூடிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன);

A Gallery of Intact Penises in Art- Pompeii (and Herculaneum)

பிரியாபுஸின் திகைக்க வைக்கும் ஆண்குறி: பிறகு “பிரியாபுஸ்” (Priapus) பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற கிரேக்க சிற்பங்களுக்கும், இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், மற்ற சிற்பங்களில் (கடவுளர்களின் சிற்பங்களேயானாலும்) ஆண்குறி இயற்கையான அளவில் செதுக்கப் பட்டிருக்கும், ஆனால், “பிரியாபுஸ்” சிற்பத்தில் பெரிதாக / அளவிற்கு அதிகமான பரிமாணத்தில் இருக்கும், பிரதானமாகச் செதுக்கப்பட்டிருக்கும்! அதே மாதிரி மெர்குரியின் சிற்பங்களும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. மெர்குரி “கடவுளர்களின் தூதுவன்” என கருதப்படுகிறான். இச்சிற்பங்கள் சுட்டமண், உலோகங்களினால் செய்யப்பட்டவை. இவற்றை போர்கியா, நேப்பிள்ஸ், லௌரே, பாம்பேய் முதலிய மியூஸியங்களில் / அருங்காட்சியகங்களில் காணலாம்!

Phallic sculpture Greece

ஜைனத்தில் நிர்வாண சந்நியாசிகள் உருவானது எப்படி?: . ஜைனர்களில் சித்தாந்த ரீதியில் பிணக்கு வந்தபோது, அவர்கள் “திகம்பரர்கள்” (ஆடை அணியாதவர்கள், நிர்வாணிகள்) மற்றும் “ஸ்வேதம்பரர்கள்” (ஆடை அணிந்தவர்கள், அதாவது வெளையாடை தரித்தவர்கள்) என்று இரண்டாகப் பிரிந்தனர். இங்கு போராடும் சத்திரியர்களின் நிலை தான் அவர்களைப் பிரிய வைத்தது. முழு அஹிம்சை வேண்டும் அல்லது வேண்டாம் என்ற வாதம் வந்தபோது, ஆடைகூட அஹிம்சைக்கு வழிவகுக்கும், எனவே, அதையும் துறக்க வேண்டும் என்ற உறுதியுடன், திகம்பரர்கள் முடிவு செய்து, அவ்வாறே வாழ ஆரம்பித்தனர். நிர்வாணமே எங்களது ஆடை என்று திகம்பரர்கள் பெருமையாக துறந்து வாழ்ந்தனர். அஹிம்சையை விரும்பி, போரை எதிர்க்கும் பண்பைக் கொண்டவர்கள்.

Phallic worship - Sculpture - Rat

கிரேக்கர்களின் மூலம்: மஹாபாரத யுத்தத்திற்குப் பிறகு, பங்கு கொண்ட சத்திரியர்கள், வீரர்கள் பலதிசைகளில் செல்ல நேர்ந்தது. 3102 BCE காலத்தில் துவாரகா பகுதி மூழ்கி, சுற்றியுள்ள பகுதிகளில் சேதங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால், அவர்கள், செல்ல வேண்டிய இடத்திற்கு பதிலாக, வேறு இடங்களில் கூட சென்று தங்கி விட்டனர். கிரேக்கர்களின் மூலம் அயோனியர்களிடமிருந்து பெறப்படுகிறது. இவர்கள் எல்லோருமே “பாதை மாறிய சத்திரியர்கள்” (degraded Khastriyas) என்றே, இந்திய புராணங்கள் குறிப்பிடுகின்றன. எட்வொர்ட் பொகோக் (Edward Pockoke)[1], ஜே. பி. பூரி (J. B. Bury) போன்ற சரித்திராசிரியர்கள் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர் கிரேக்கர்களும் ஜைனர்களைப் போன்ற நிர்வாண கொள்கையினைக் கொண்டிருந்தனர், அதனைத்தான் தமது கலையில் வெளிப்படுத்தினர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[2]. இப்பொழுதும், அப்பகுதிகளில் இருந்த நிர்வாண சந்நியாசிகள் பௌத்தர்களா, ஜைனர்களா, என்ற குழப்பவாதம் நீடித்து வருகின்றது[3]. கிரேக்கத்தில் ஒரு சிரமணாச்சாரியாரின் கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது என்ற செய்தி வந்தபோதும், அவர் பௌத்தரா அல்லது ஜைனரா என்ற விவாதம் ஏற்பட்டது.

Tintinnabulum from Pompeii showing a phallus

கிரேக்கர்கள் கிழக்கிலிருந்து, மேற்கு திசைக்குச் சென்று குடியேறிய மக்கள்: கிரேக்கர்கள் யார் என்று ஆராய்ந்தவர்கள் அவர்களை பலவாறு குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட இடத்திலிருந்து வந்திருக்கலாம் என்ற ரீதியில், அயோனியன் கிரேக்கர் [Ionians], மைசீனியன் கிரேக்கர் [Mycenaean Greeks], மைனோயன் கிரேக்கர் [Minoan civilization], டோரியன் கிரேக்கர் [Dorians], ஏலியன் கிரேக்கர் [Aeolians], அகியன் கிரேக்கர் [Achaeans], இட்ருஸ்கன் கிரேக்கர் [Etruscans, 768 BC–264 BC] என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இதில், அயோனியர் என்பது யவனர் என்ற இந்தியமொழி பிரயோகத்துடன் ஒத்து வருகிறது. மேலும், கிரேக்கரே, தாங்கள் மற்றும் தங்களது மூதாதையர் கிழக்கிலிருந்து வந்தார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். அதாவது, “பாதை மாறிய சத்திரியர்கள்” (degraded Khastriyas), ஜைனர்கள் என்ற முறையிகல் வந்து குடியேறி, நாளடைவில், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ற்படி மாறியிருக்கலாம். மேலும், குறிப்பிட்ட குழுக்களின் சரித்திர காலம், கிரேக்கர்களுக்கு முன்னர் செல்கிறது. 3102  BCE முதல் சுமார் 1000 BCE லாம் வரை என்ன நடந்தது, என்று சரித்திராசிரியர்களும் எழுதி வைக்கவில்லை.

© வேதபிரகாஷ்

29-08-2016

A Greek vase depicting homo-sexual act

[1] Pococke, Edward. India in Greece; Or, Truth in Mythology... Griffin, 1856.

[2] Bonfante, Larissa. “Nudity as a costume in classical art.” American Journal of Archaeology (1989): 543-570.

[3] Halkias, Georgios T. “The Self-immolation of Kalanos and other Luminous Encounters Among Greeks and Indian Buddhists in the Hellenistic World.”Journal of the Oxford Centre for Buddhist Studies 8 (2015).

ஆண்- உறுப்பு மற்றும் பெண்-உறுப்பு வழிபாடு பற்றிய சர்ச்சை – சரித்திர ரீதியிலான அலசல்!

ஓகஸ்ட் 29, 2016

ஆண்உறுப்பு மற்றும் பெண்உறுப்பு வழிபாடு பற்றிய சர்ச்சை – சரித்திர ரீதியிலான அலசல்!

India Gandhi getting blessings from Jaina Muni in 1978

இந்தியாவைப் பற்றிய புரட்டு சரித்திரமும், சித்தாந்திகளின் கூட்டும்: இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் ஆணுறுப்பை, பெண்ணுறுப்பை வழிபடுகிறார்கள் என்று மேனாட்டவர்கள், ஐரோப்பிய-அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் கேலியாக, குறைகூறும் விதத்தில், இந்துக்கள் ஏதோ அநாகரிகமான செயல்களை செய்வது போல எழுதி வந்துள்ளனர்-வருகின்றனர். இந்துமத விமர்சகர்கள், இந்துமதத்தைக் குறை கூறுபவர்கள் மற்றும் இந்து-விரோதிகள் கூட கம்யூனிஸ, செக்யூலரிஸ, நாத்திக, திராவிட போர்வைகளில், தமக்கேயுரிய சித்தாந்தங்களில் அவதூறு செய்வதில் சந்தோசமாகவே இருக்கின்றனர். இந்துக்களில் பெரும்பாலோர், கடந்த 100-200 ஆண்டுகளில் இந்திய சரித்திரம் எவ்வாறு எழுதப்பட்டது, குறிப்பாக இந்துமதத்தை தவறாகச் சித்தரிக்கும் போக்கில் அவ்வாறெல்லாம் எழுதி வைத்தனர் என்பதையும் அறிந்து கொள்ளாமல், வேறு வகையில் விளக்கம் கொடுத்து, காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகக்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், புகழ், பணம், அந்தஸ்து கிடைத்து விட்டால், நாங்கள் எழுதுவது தான் சரி, என்ற அகம்பாவத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இக்கால இளைஞர்கள் முழுவதும் படிக்காமல், அரைகுறை விசயங்களுடன், அடுத்தவர் சொல்வது, மேடைகளில் பேசுவது முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, அவற்றை நம்பி, வாத-விவாதங்களை செய்ய வந்து விடுகிறார்கள். இந்நிலையில், உண்மை நிலை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது.

Sonia Gandhi getting blessings from Jaina Muni

ஐரோப்பியர்அமெரிக்கர்களின் மறைப்புவாதம்: ஆண்- பெண் உறுப்பு வழிபாடு ஆராய்ச்சியில் மேனாட்டவர்கள், ஐரோப்பியர் மற்றும் அமெரிக்கர் பாரபட்சமாகவே நடந்துள்ளனர் என்பது அவர்களது எழுத்துகளினின்று புலப்படுகின்றது.  பழைய நாகரிகங்களை ஆராய்ந்த போது, அவர்களுக்கு அத்தகைய பழக்க-வழக்கங்கள் தம்மிடம் தான் இருந்தன என்று தெரிய வந்தது. லண்டன், பாரிஸ், போன்ற தலைநகரங்களை விடுத்து, உள்ளே சென்றால், அவர்களது பழங்கால, இடைக்கால, ஏன் 19-20 நூற்றாண்டு நாகரிகங்களின் எச்சங்கள் அவர்களது நிலையை எடுத்துக் காட்டுகின்றன. அவர்களது முன்னோர்களின் நிலையையும் மெய்ப்பிக்கின்றது. குளிர்பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் அதிகமான பாலியலில் ஈடுபட்டனர். இதனால், அத்தகைய எண்ணங்கள் இலக்கியம், சித்திரங்கள், சிற்பங்கள் என்று எல்லாவற்றிலும் பிரதிபலித்தன. ஃபல்லிக் வொர்சிப் [phallic worship] ஆண்குறி வழிபாடு என்பதெல்லாம் அவர்களது வழக்கம் என்பதை அதன் மூலங்களை ஆராயும் போது தெரிந்து கொள்ளலாம். ஆனால், மறைப்புவாதம் [negationism] மூலம் மறைத்து, இதற்கெல்லாம் மற்றவர்கள் காரணம் என்பது போல எழுதி வைத்தனர்.

Priapus in different forms

ஆண்குறிஆணுறுப்பு வழிபாடு தோற்றம்: ஆண்குறியை “பல்லஸ்” என்றார்கள், அது கிரேக்க கூறுலிருந்து பெறப்பட்டு, இலத்தீனில் “பல்லஸ்” ஆகியது. பேல் அல்லது பூல் என்ற இந்தோ-ஐரோப்பிய கூறுக்கும் தொடர்பு படுத்தப்பட்டது [Greek φαλλός = Latin phallus,, which is ultimately a derivation from the Proto-Indo-European root *bʰel– “to inflate, swell”]. ஹெர்மிஸ் [Hermes] என்ற கிரேக்கக் கடவுளுடன் இது தொடர்பு கொண்டதாக, கிரேக்கப் புராணங்களை சொல்கிறார்கள். “ஹெர்ம்” [Herm] என்றால் தூண் அதனால், ஆணுறுப்பு நீண்டு கொண்டிருக்கும் நிலையை “பல்லஸ்” என்று குறிப்பிட்டார்கள். ஆணுறுப்பு போன்ற உலோகத்தினால் ஆன விக்கிரகத்தை சங்கிலியால் தொங்கவிடப்படும் நிலையில் ரோமாபுரி நகரமான போம்பெய் [Pompeii] என்ற இடத்தில் கிடைத்துள்ளன. காற்றில் மணிசத்தம் கேட்கும் தொங்கல்களிலும் [wind chimes / tintinnabula] அத்தகைய உருவங்கள் காணப்படுகின்றன. ஹெர்மிஸின் மகன் பான் [Pan] என்பவன் எப்பொழுதுமே, ஒரு பெரிய ஆண்குறியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளான்.  இத்தகைய சித்திரங்கள், கவிதைகள், சிலைகள், விக்கிரகங்கள் முதலியவற்றைப் பார்த்தால், அம்மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[1].

anasyrma-04

கிரேக்கரோமானிய ஆண்குறி வழிபாடு, விழா முதலியன: பிரியாபஸ் [Priapus] என்ற இன்னொரு கிரேக்கக் கடவுளும் அவ்வாறே சித்தரிக்கப் படுகிறான். “லென்ட்” என்ற கிருத்துவ சடங்கின் போது, கிரேக்க நகரமான டிர்னவாஸ் [Tyrnavos] என்ற இடத்தில் வருடாந்திர “பல்லஸ் விழா” நடைபெறுவதுண்டு. அதாவது, கிருத்துவம் இடைக்காலத்தில், பல நாகரிகங்களிலிருந்து, கடன் வாங்கிக் கொண்டு வளர ஆரம்பித்த போது, அந்நிலையில் தான் இருந்தது. ரோமானிய நாகரிகத்தில் இது “பாசினம்” [fascinum] என்ற உருவத்தில் இருந்தது. ரோமானிய சிறுவர்கள் “புல்லா” என்ற தாயத்தை வயதுக்கு வரும் வரை அணிந்திருந்தார்கள். “புனிதமான பல்லஸ்” கன்னித்தன்மைக்கு, பெண்மைக்கு, உடலுறவிற்கு பாதுகாப்பு என்றும் அத்தகைய சின்னங்களை வைத்துக் கொண்டார்கள், பூஜித்து வந்தார்கள். இவை கிருத்துவ மதத்திலும் தகவமைத்துக் கொண்டனர். கிருத்துவமதத்திற்கு எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லாததால், பாபிலோனிய-எகிப்திய-கிரேக்க-ரோமானிய கதைகளோடு, பைபிள் கதைகளை இணைத்து, புதிய கட்டுக்கதைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இதனால், மேரி எப்படி வேண்டுமானாலும் இருப்பாள், இருக்கலாம் என்று மடத்தனமாகச் சித்தரிக்க ஆரம்பித்தனர்.

A Greek woman carrying a big phallus.

கிரேக்க நிர்வாணம், நிர்வாண சிலைகள், கொக்கோக கவிதைகள் முதலியன:  கிரேக்க நிர்வாணம், நிர்வாண சிலைகள், கொக்கோக கவிதைகள் அவர்களை அடக்கியே வாசிக்க வைத்தது. புரோபர்டியஸ் (Probertius), ஓவிட் (Ovid), டையோமெடிஸ் (Diomedes) முதலியோரின் கொக்கோக கவிதைகள் திகைக்க வைத்தன. ஆண்-உறுப்பை அப்படி தத்ரூபமாக வடித்துள்ளது ஏன் என்று திகைத்தார்கள். கிரேக்க இலக்கியங்களை “காமெடி” மற்றும் “டிராஜெடி” என்ற பிரித்த நிலையில், இவற்றை “காமெடியில்” வைத்தனர். அதே போல பெண்-உறுப்பையும் சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதையும் தயக்கத்துடன் மறைத்துள்ளனர். இதனால் தான், அக்கவிதை எண்ணங்கள் சிற்பங்களிலும் வெளிப்பட்டன. இடைக்காலத்தில் அத்தகைய உறுப்புகளின் சிலைகள், சின்னங்கள் முதலியவற்றை திருஷ்டி பரிகாரத்திற்கு, தீயதை விலக்க வைக்கப்பட்டன என்ற விளக்கத்தையும் கொடுத்தனர். சிலர் அவையெல்லாம் பேய்-பிசாசுகள் ஓட்டுவது போன்ற முறையுடன் சம்பந்தப்பட்டது என்று விளக்கம் கொடுத்தனர். ஆண்-உறுப்பு சின்னங்கள் தாம் அத்தகைய சக்தியைக் கொண்டிருந்தன என்றால், பெண்-உறுப்பு சின்னங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா என்று சில ஆராய்ச்சியார்கள் கேட்கத்தான் செய்தார்கள்.

An Old Babylonian clay plaque on display at The Israel Museum depicts a couple having sex

செக்ஸ்பாலியல், தெய்வீக விபச்சாரம் முதலியன: பெசபடோமிய நாகரிகத்திலும் செக்ஸ் என்பது வெளிப்படையாகவே இருந்தது. விபச்சாரத்திற்காக இளம் பெண்கள் சந்தைகளில் விற்கப்பட்டனர். தவிர புண்ணிய / தெய்வீக விபச்சாரம் என்பதும் இருந்தது. இஸ்தர்-இனன்னா-இன்னம்மா கோவிலில் [temple of Ishtar (Inanna)] உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் ஒரு முறையாவது, அங்கிருக்கும் நபர் தேர்ந்தெடுக்கும் போது, அவருடன் உடலுறவு கொள்ள வேண்டும். இத்தகைய முறைதான் பிறகு, கிருத்துவத்தில் கான்வென்ட், கன்னியாஸ்திரி, ஏசுவின் மனைவிகள் போன்றவற்றில் மாறின என்று எடுத்துக் காட்டப்படுகிறது. ரோமானியர்களுக்கு செக்ஸ் / பாலியல் என்பது வாழ்க்கையின் அங்கமாக இருந்தது. ரோமானியர்களின் அத்தகைய புராதன தொகுப்பை ஒரு ரகசிய அறையில் [secret cabinet (gabinetto segreto)] வைத்திருந்தனர். இப்பொழுது அது நேப்பிள்ஸின் தேசிய அகழ்வாய்வு அருங்காட்சியகத்தின் [Naples National Archaeological Museum] பகுதியாக உள்ளது. 1819ல் பிரான்சிஸ் I [King Francis I of Naples] தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து பார்த்தபோது திகைத்து அதனை பூட்டி வைக்கும்படி ஆணையிட்டார். இங்கிலாந்து அரசி லண்டன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் போதும், இதே போல நடந்தது. அப்பொழுது, நிர்வாண சிற்பங்களையெல்லாம் இலை போன்றவற்றை வைத்து மறைத்தார்கள்.

persian-sex-poetry-illustrated-Vedaprakash

இஸ்லாமிய செக்ஸ், பாலியல், கொக்கோகம் முதலியன: இஸ்லாமிய நாடுகளில் நடந்தவற்றை விளக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, ஏனெனில், உருவ வழிபாடு கூடாது என்ற ரீதியில் அவர்கள் பெரும்பாலான ஆதாரங்களை அழித்துவிட்டனர். அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்ற மூன்று பெண் குழந்தைகள் அல்லாவுக்கு இருந்ததாக குரான் மற்றும் ஹதீஸ் நூல்கள் குறிப்பிடுகின்றன. இதைத்தவிர, மொஹம்மது நபி வீனஸை வழிபட்டு வந்தார் போன்ற குறிப்புகள் உள்ளன. மெக்காவில் உள்ள பெண்ணுறுப்பு போன்ற உருவத்தை முந்தைய வழிப்பாட்டின் எச்சமாகவே கருதப்படுகிறது. இடைகாலத்தில், கொக்கோக நூல்கள் இஸ்லாத்தில் தான் அதிகமாக எழுதப்பட்டன. போரிட்டுக் கொண்டே இருந்ததால், வீரர்களுக்கு பிடித்து வந்த பெண்கள் காமப்பசிக்கு இரையாக்கப் பட்டனர். பிறகு, தனிப்பட்ட அந்தப்புரம், ஹேரம் போன்றவை உருவாக்கப் பட்டன. சந்தையில் பெண்கள் விற்கப்பட்டன, அவர்கள் ஹேரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதனால், கொக்கோக வாழ்க்கையின் சந்தோசங்கள், இன்பங்கள், உறவுகள் பற்றி, மேன்மேலும் இலக்கியங்கள், சித்திரங்கள் உருவாக்கப்பட்டன. இன்றளவிலும், இஸ்லாத்தின் தாக்கம், இவ்விவகாரங்களில் எல்லைகளைக் கடந்து தான் செயல்பட்டு வருகின்றது.

© வேதபிரகாஷ்

29-08-2016

Ithyphallic Priapus coin - 193-21 CE

[1] Stewart, Peter. “Hallett The Roman Nude. Heroic Portrait Statuary 200 BC–AD 300. Pp. xxii+ 391, ills. Oxford: Oxford University Press, 2005. Cased,£ 80. ISBN: 978-0-19-924049-4.” The Classical Review (New Series) 57.01 (2007): 221-223.