Archive for the ‘ஏசுகிருஸ்து’ Category

ஆண்குறி வழிபாட்டில் இந்தியாவுக்கு, இந்துமதத்திற்கு எதிரான வாதம் ஏன்?

ஓகஸ்ட் 29, 2016

ஆண்குறி வழிபாட்டில் இந்தியாவுக்கு, இந்துமதத்திற்கு எதிரான வாதம் ஏன்?

Terracotta plaques showing sexual activities of Babylonian civilization dating cack to 2000-1500 BCE

ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அடையாளம் காணுவதில் சிக்கல்: ஜைனர்களை விட, பௌத்தர்களின் தாக்கத்திற்கு, எகிப்து மற்றும் ஐரோப்பா வரை அகழ்வாய்வு சான்றுகள் பல கிடைத்துள்ளன. லக்ஸாரில் ஒரு புத்தரின் சிலை காணப்படுகிறது. அதாவது, அதன் தேதி 1600 BCE காலத்திற்கு செல்கிறது. அதேபோல ஐரோப்பாவில், பல இடங்களில் பௌத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன[1]. வடமேற்கு இந்தியாவில், சிந்து முதல் எகிப்து வரை பௌத்த விஹாரங்கள், சிற்பங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், கிரேக்கர்களின் நாகரிகம், கலாச்சாரம் முதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, பௌத்த தாக்கம் காணப்படவில்லை, மாறாக, ஜைனர்களின் தாக்கம் காணப்படுகிறது. ஜைனமுனிவர்கள் இன்றளவும், திகம்பரத்தைப் பின்பற்றி வருகின்றனர். ஜைன சிற்பங்கள், குறிப்பாக தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிர்வாணமாகவே காணப்படுகின்றன. ஆனல், ஜைனர்கள் அவற்றை பூஜித்து வருகின்றனர்.

17761_phallic_processions

அலெக்சாந்தருடன் வாதிட்ட நிர்வாண சந்நியாசிகள் யார்?: அலெக்சாந்தர் சில நிர்வாண சாமியார்களை (Gymnophists) சந்தித்து, அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டான் என்று சில கதைகள் கூறுகின்றன. “அலெக்ஸ்சாந்தர் ரோமேன்ஸ்” [Alexander Romance] என்ற சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகள் ஆதாரமான உள்ள புனைந்த கதைகளை வைத்து அத்தகைய வாதங்கள் செய்யப் பட்டன. அந்த நிர்வாண சாமியார்கள் யார் என்று குழப்பம் இருக்கிறது. அவர்கள் “பிராமணர்கள்” என்றும் சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர்[2]. ஆனால், ஜைன, யூத, கிருத்துவ சிற்பங்களில் உள்ள நிர்வாணம் அவர்களை உண்மையறிய வைத்துள்ளது[3]. முன்பு நிர்வாண சிற்பங்கள், பாலியல் ரீதியிலான சித்திரங்கள்-சிலைகள் முதலியவற்றை உருவாக்கி விட்டு, பிறகு ஒரு நிலையில் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்கத் தக்கது. அவர்களிடையேயும் நிர்வாணத்தைப் பற்றிய வாத-விவாதங்கள் ஏற்பட்டுள்ளன[4].

MAN-Herma - Hermes

ஞாஸ்டிக், எஸ்ஸென், வெள்ளையுடை உடுத்திய பிரம்மச்சாரி குழுக்கள்: வெள்ளையுடை அணிந்தவர்களும் பல தத்துவ-ஞானக் குழுக்களுடன் ஒப்பிடப்பட்டார்கள். ஞானத்தையே தேடும், விரும்பும் அவர்கள் எல்லாவற்றையும் துறந்தவர்கள், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடுப்பவர்கள், தாவிர உணவையே  உட்கொள்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, ஞான், ஞானம், ஞானி, ஞானத்துவம் [Gnostikos, gnosis, Gnostics, Gnosticism] என்றெல்லாம் சிலகுழுக்கள் அடையாளம் காணப்பட்டன. தவிர, எஸ்ஸென் என்ற குழுவும் [Essenes] அத்தகைய குணாதைசயங்கள் கொண்டுள்ளது அறியப்பட்டது. இவர்கள் எல்லோரும் வெள்ளையாடைகள் உடுத்தினர் என்றும் விவரிக்கப்பட்டது. ஆகவே, இவர்கள் எல்லாம், “ஸ்வேதம்பரர்” வெள்ளையாடை உடுத்திய குழுக்கள் என்று சொல்லலாம். அதாவது, ஜைனர்களைப் போன்றவர்கள், ஆனால், திகம்பர-நிர்வாண சந்நியாசிகளுடன் மாறுபட்டவர்கள்.

கிரேக்க சிற்பங்கள் - இதெல்லாம் கலைதான்

இடைக்காலத்திலும் பழைய நம்பிக்கைகள் தொடர்ந்தது: இடைக்கால கத்தோலிக்கக் கிருத்துவ வழிப்பாட்டில் ஆண்-பெண் உறுப்பு வழிப்பாடு அதிகமாகவே இருந்தது. நெதர்லாந்து பகுதிகளில் கிடைத்த, உலோக பொருட்கள், இதனை எடுத்துக் காட்டுகிறது. இரு கால்களுக்கிடையே ஆண்குறி, பெண்குறியை மூன்று ஆண்குறி மனிதர்கள் தூக்கிச் செல்வது, ஒரு பெண் பெரிய ஆண்குறியைத் தள்ளிச் செல்வது போன்றவை அவற்றில் சித்தரிக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் பதக்கம் போன்று நகைகளுடன் கழுத்தில் அணியப்பட்டன. பொதுவாக குழந்தை பாக்கியம் வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டும், போன்ற நோக்கில் அவை அணியப்பட்டன. பிரபலமாக இருந்ததால், அவை உற்பத்தி செய்யப் பட்டு மக்களிடையே விற்கப்பட்டதும் தெரிகிறது. மக்கள் இவற்றை அதிகமாகவே உபயோகப்படுத்தி வந்தது தெரிகிறது[5]. மேரி, அகதா, பார்பரா [Mary, Agatha and Barbara] போன்ற தேவதைகளை வணங்கி வந்தாலும், இவற்றையும் மதித்துப் போற்றி வந்தனர்[6].  இவையெல்லாம், 13-14ம் நூற்றாண்டுகளில் கிருத்துவம் இன்னும் மக்களிடம் முழுவதுமாக பிரபலமாகவில்லை என்றதைத்தான் காட்டுகிறது. மேலும், கிருத்துவம் அறிமுகப்படுத்தப் பட்டாலும், முந்தைய மதநம்பிக்கைகளில் மக்கள் ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய ஈடுபாடு அவர்களின் மீது திணிப்பதால் உண்டானதல்ல, ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாகப் பின்பற்றிவந்த நம்பிக்கைகளின் மீது ஆதாரமக இருந்தது என்பதும் அறியக்கூடியதாக உள்ளது.

The Triumph of the Phallus (1700–1750).3

நவீனத்துவ வாத-விவாதங்கள்-விளக்கங்கள்: நிர்வாணம் இறப்பிலிருந்து இறக்கும் வரை உள்ள மனிதனின் நிதர்சனம் ஆகும். விஞ்ஞான ரீதியில், மனித தோற்றத்தை விளக்கும் முறைகளில் மனிதனை நிர்வாணமாகவே காட்டப்படுகிறான். பாம்பைப் பார்த்து ஆதாம்-ஏவாள் பயந்து, இலை-தழைகளை வைத்து தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டனர் போன்ற கதைகளை நம்பும், அறிவுஜீவிகள் கூட, பிறகு தான், நிர்வாணம் ஒவ்வாதது என்று வாதிக்க ஆரம்பித்தனர். ஆனால், வேறு இடங்களில், மறுபடியும் போற்ற செய்தனர். நடிகைகளின் நிர்வாணத்தை ரசிக்கும் அந்த வகையறாக்கள், இன்றும் ஜைனமுனிவர்களின் நிர்வாணத்தைக் கொச்சைப்படுத்துகின்றன. ஆனால், சாமிக்கு டிரஸ் கோட் உண்டா என்றும் கேட்கின்றன. அதாவது, அவர்களது முரண்பாட்டை அதிலே எளிதாகக் கண்டு கொள்ளலாம். ஒருநிலை இல்லாத, மாறி-மாறி விதண்டாவாதம் செய்வதால் தான், அவர்களின் நிலைப்பாடு உறுதியாக இல்லை. எந்த நிர்வாணத்தை ஆதரிப்பது-எதிர்ப்பது என்று தெரியாத நிலையில் உள்ளார்காள். போதாகுறைக்கு, எழுதுவதில், பேசுவதில், ஆராய்ச்சி செய்வதில், தேவையானது-அதாவது அவர்களின் வாதத்திற்கு ஆதரவாக உள்ளது என்றால் எடுத்துக் கொள்வது, அதே நேரத்தில், பாதகமாக இருக்கிறது என்றால் மறைத்து விடுவது போன்ற பாரபட்சம் மிக்க போக்கும் இருப்பதால், உண்மைக்கு வராமல் வாதித்துக் கொண்டே இருப்பர். செக்யூலரிஸம் என்றாலும், ஒருபக்கம் சாய்வர், அதாவது, இந்துமதத்தை எதிர்ப்பர்.

Vulva phallic erotic badges

மேற்கண்ட குறிப்புகளிலிருந்து, கீழ்கண்ட முடிவுகள் பெறப்படுகின்றது:

  1. பாபிலோனிய, அசிரிய, எகிப்து, ரோமானிய, கிரேக்க ஆண்- உறுப்பு மற்றும் பெண்-உறுப்பு வழிபாடு, இந்திய முறையுடன் ஒப்பீடு செய்யமுடியாது.
  2. ஜைன திகம்பர தாக்கம், நிர்வாண சிற்பங்கள் அமைப்பு முதலியவற்றை வைத்து, கிரேக்கர் மீதான ஜைன தாக்கத்தை அறியலாம்.
  3. ஆண்குறிக்கு கிரேக்க மற்றும் கிரேக்க மின்னோடி நாகரிகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது, ஜைனத்துடன் ஒத்து வருகிறது.
  4. டெலோஸ் கோவிலில் ஆண்குறி அளவு பெரிதாக இருந்து, பிறகு குறைகிறது. ஜைனத்தில், இடைக்காலத்திற்கு பிறகு, சிற்பத்தின் அளவே பெரிதாகிறது.
  5. ஜைனதாக்கம் கிரேக்கத்தில் காணும்போது, பழங்கால இந்தியாவில், அவர்களது தாக்கம் மறைகிறது.
  6. இடைக்காலத்தில், ஜைனர்களின் தாக்கம் மறுபடியும் இந்தியாவில் அதிகமாகும் போது, கிரேக்க நாகரிகம் ஏற்கெனவே மறைந்து விடுகிறது.
  7. ஆனால், கிருத்துவம் வளர ஆரம்பிக்கிறது, அதில் அதே நிர்வாண சின்னங்கள் தகவமைத்துக் கொள்ளப்படுகின்றணா.
  8. மேரி – பாபிலோனிய, அசிரிய, எகிப்து, ரோமானிய, கிரேக்க உருவங்களில் பலவாறு தோற்றமளித்து, சித்திரங்களில், சிற்பங்களில் மாறுபடுகிறாள்.
  9. ஆனால், ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து உருவம் நிலையற்றதாகி, குழப்பமடைகிறது.
  10. ஆண்-பெண் இணைப்புகளில், கலவைகளில், குழப்பங்களில், திரியேகத்துவம் முதலியவை நுழைக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

29-08-2016

three phalli bearing a crowned vulva in a procession, 1375-1450

[1]  Donald A Mackanzie, Pre-Christian Buddhism in Great Britain and Ireland,  Blackie and Son Ltd, 1928.

[2] Stoneman, Richard. “Naked philosophers: the Brahmans in the Alexander historians and the Alexander Romance.” The Journal of Hellenic Studies 115 (1995): 99-114.

[3] Roth, Gustav. “Aniconic and Iconic Tendencies in Jainism, Judaism and Christianity.” Studies in Art and Archaeology of Bihar and Bengal (1989): 1888-1988.

[4] Poliakoff, Michael. “” THEY SHOULD COVER THEIR SHAME”: ATTITUDES TOWARD NUDITY IN GRECO-ROMAN JUDAISM.” Source: Notes in the History of Art 12.2 (1993): 56-62

[5] http://www.medievalbadges.org/mb_insignes_UK.html

[6] Sebastiaan Ostkamp, The world upside down. Secular badges and the iconography of the Late Medieval Period: ordinary pins with multiple meanings, Journal of Archaeology in the Low Countries 1-2 (November 2009)