Archive for the ‘லெனின் கருப்பன்’ Category

நித்யானந்தாவை வீடியோ எடுத்த பிரேமானந்தா என்கின்ற நித்யதர்மானந்தா!

மார்ச் 6, 2010

நித்யானந்தாவை வீடியோ எடுத்த பிரேமானந்தா என்கின்ற நித்யதர்மானந்தா!

லெனின் கருப்பன் என்ற பிரேமானந்தா என்கின்ற நித்யதர்மானந்தா: லெனின் என்ற பெரிய கருப்பன் தான் இம்மாதிரி வீடியோ எடுத்து மிரட்டுகிறான், பெயரைக் கெடுக்கிறான் என்று நித்தியானந்தா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட அஃபிடேவிட்டில் சொல்லப்பட்டுள்ளது. சேல‌ம் மாவட்‌ட‌ம் ஆ‌த்தூரை சேர்ந்தவர் லெ‌னி‌ன் கருப்பன். அதன்படியே தலைமறைவான கார் டிரைவர் தர்மானந்தாவை பிடித்து விசாரித்தால் இந்த சிடியின் பின்னணி சதி குறித்து தெரியவரும் என்று ஆசிரமம் தரப்பில் கூறப்பட்டது.  இவர் நித்யானந்தாவுக்கு உதவியாளராகவும் டிரைவராகவும் சீடராகவும் இருந்தவர் ஆவார். 2004ம் ஆண்டு முதல் நித்யானந்தரின் மீது பக்தி ஏற்பட்டு 2006ம் ஆண்டு முதல் பெங்களூர் நித்யானந்தர் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்ததாகக் கூறினான். நடிகை ரஞ்சிதாவுடன் தர்மானந்தா கூட்டு சேர்ந்து இந்த வீடியோவை எடுத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

இப்படி பெயரை மாற்றிக் கொண்டு வேலை செய்து வந்த இந்த சாமியார் யார்? பல பெயர்களில் திரிந்த வந்த இந்த சாமியாரைப் பற்றி எந்த தகவல்களையும் போலீஸார் வெளியிடாதது மர்மமாக உள்ளது. முன்பு ஊடகங்கள் குரிப்பிட்டடு, “நடிகை ரஞ்சிதாவுடன் தர்மானந்தா கூட்டு சேர்ந்து இந்த வீடியோவை எடுத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது”, என்றதாகும். அப்படியென்றால் இந்த சாமியாரைப் பற்ரியும் விசாரிக்க வேண்டாமா?