Archive for the ‘தனிமனிதர் ஒழுக்கம்’ Category

போர்னோகிராபி (உடலுறவு காட்டும் படங்கள்), சைபர் போர்னோகிராபி (இணைதளங்களில் காட்டப்படும் செக்ஸ் படங்கள்), சட்டதிட்டங்கள், தனிமனிதர் ஒழுக்கம்-கட்டுப்பாடு முதலியன.

ஜூலை 13, 2013

போர்னோகிராபி (உடலுறவு காட்டும் படங்கள்), சைபர் போர்னோகிராபி (இணைதளங்களில் காட்டப்படும் செக்ஸ் படங்கள்), சட்டதிட்டங்கள், தனிமனிதர் ஒழுக்கம்-கட்டுப்பாடு முதலியன.

ஆண்பெண் உடலுறவு காட்சிகள்,  செக்ஸ் படங்கள் முதலியவற்றைப் பார்பபது: பொதுவாக அதிக எண்ணிக்கையில் இணைதளங்களில் பார்க்கப்படுவது மற்றும் படிக்கப்படுவது செக்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள், சினிமாக்கள், யு-டியூப், செய்திகள், கட்டுரைகள் மற்ற விவரங்கள் தாம். சினிமா நடிகைகளின் நிர்வாணபடங்கள் என்று போட்டால் அவ்வளவுதான், அதனை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பார்த்து உணர்ச்சிகளை தூண்டிவிட்டுக் கொண்டிருப்பார்கள். கண்ணால், மனத்தால் அனுபவிப்பார்கள். வார்ட்பிரஸ்.காம் என்ற தளத்தில் எப்பொழுதுமே முன்னணியில் இருப்பது:

மேலோங்கும் WordPress.comஇன் இன்றைய‌ வலைப்பதிவுகள்

இது உண்மையில் வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். சில இணைதளங்கள் “வயது வந்தவர்களுக்கு மட்டும்”, “18 வயது கீழுள்ளவர்கள் பார்க்கக் கூடாது”, “தடை செய்யப் பட்டுள்ளது” என்ற எச்சரிக்கைகள் இருந்தாலும் பார்க்கத்தான் செய்கிறர்கள். நல்ல விஷயங்களைப் பற்றி போட்டால் அதையும் பார்ப்பார்கள். ஆனால், நிச்சயமாக எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கின்றது.

சைபர் போர்னோகிராபி சட்டம்  வருமா?: ராஜ்யசபாவில் மனுக்களை விசாரிக்கும் கமிட்டி இத்தகைய கோரிக்கைகளை கவனித்து தகவல் தொழிற்நுட்பம் சட்டம் 2000 [the IT Act, 2000] பிரிவுகளைத் திருத்தி சைபர் போர்னோகிராபி [cyber pornography] என்ற வகையில் ஒரு குற்றமாக நுழைத்து அதற்கான தண்டனையும் அமூல் படுத்த உத்தேசம் உள்ளது. பொது மக்களிடமிருந்தும் அதைப் பற்றி கருத்துக் கேட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மனு ஜைன துறவி விஜயரத்ன சுந்தர் சூரி மற்றும் விஜய ஜே. தர்தா என்ற ராஜ்யசபா எம்.பியும் [Jain priest Vijayratna Sunder Suri and countersigned by Rajya Sabha MP Vijay J Darda] அனுப்பியிருந்தனர்[1]. யார்-யாரோ தங்களது குற்றங்களை மறைக்க, குறைக்க, தப்பித்துக் கொள்ள ராஜ்யசபாவிற்கு போக வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால், உருப்படியாக ஒன்றையும் செய்வதில்லை. ஆனால், இந்த எம்பி இவ்வாறான பிரச்சினையை எடுத்துள்ளார்.

தில்லி மெட்ரோ ரயிலில் ஜோடி அந்நியோன்யமாக இருந்த வீடியோ: இந்தியாவின் ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு 35 வயதிற்கு கீழுள்ளவர்களாக இருப்பதால், அவர்கள் இத்தகைய போர்னோகிராபி என்ற ஆண்-பெண் உடலுறவு கொள்ளும் தளங்களுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். முன்பு படித்து மகிழ்ந்ததை, பிறகு புகைப்படங்களில் பார்த்து ரசித்ததை, பிறகு சினிமாக்களில் காட்டப்பட்டதை இன்று வெளிப்படையாக இணைதளங்களில் காட்டப்படுகின்றன. இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்பாக காலியாக இருந்த தில்லி மெட்ரோ ரயிலில், ஒரு ஜோடி அந்நியோன்யமாக இருந்ததை வீடியோ எடுத்து இணைதளங்களில் போட்டிருக்கிறார்கள்[2]. உண்மையில் இந்த வீடியோ மெட்ரோ ரயில் காமராக் காட்சிகளினின்று [CCTV footage] எடுக்கப்பட்டவை ஆகும். அப்படியென்றால், தில்லி மெட்ரோ ரயில் கார்பரேஷனில் [the Delhi Mtero Rail Corporation (DMRC)] வேலைப் பார்ப்பவர்கள் தாம் செய்திருக்க வேண்டும் என்றாகிறது[3]. இதைப் பார்த்தவர்கள் அதே மாதிரி செய்ய ஆசைப்படலாம். ஆகையால் தான் இத்தகைய இணைதளங்கள் தடைசெய்யப்படவேண்டும் அல்லது தடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள்[4].

 Couple having intimate relationship inside Delhi metro rail.1  Couple having intimate relationship inside Delhi metro rail.2
 Couple having intimate relationship inside Delhi metro rail.3  Couple having intimate relationship inside Delhi metro rail.4
 Couple having intimate relationship inside Delhi metro rail.5

பெருகிவரும் ஆபாச இணை தளங்களால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள்அதிகரிக்கின்றன: “பெருகி வரும் ஆபாச இணையதளங்களால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன. இவற்றை தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கமலேஷ் வஸ்வானி, எம். என். கிருஷ்ணமணி முதலியோர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்[5]. அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, “டிவிஷன் பெஞ்ச்’ முன், சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்று, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பினர். அதில், “ஆபாச இணையதளங்கள் முழுவதையும் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்”, என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக இன்டர்நெட் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தொலை தொடர்புத் துறை கடந்த ஜூன் 13ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆபாச படங்களை பரிமாறிக் கொள்ளவும், டவுன்லோடு செய்யவும் வசதி உள்ள 39 இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[6]. இந்த வழக்கு, நான்கு மாதங்களுக்கு பின், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மின்னணு தொழிற்துறையின் ஆபாசங்கள்: சிடி-டிவிடி விற்கும் கடைகளுக்குப் பக்கம் நடந்து போய் கொண்டிருந்தால், “புளூ பிளிம்” வேண்டுமா என்று சிலர் கேட்பது வழக்கமாக உள்ளது. அந்நிய நாடுகளில் இருந்து வரும் சிடி-டிவிடிகள் மட்டுமல்லாது, உள்ளூரிலும் பிரதிகள் எடுக்கப் பட்டு விற்பனை செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, இந்தியாவிலேயே அம்மாதிரியான படங்கள் எடுக்கப்பட்டு விற்க்கப்படுவதும் தெரியவருகிறது. ஆனால் இதற்கு காரணம் திரைப்படத் துறைதான். சினிமா நடிகைகள், நடனக்காரிகள், எக்ஸ்ட்ரா எனப்படும் நடிகைகள் முதலியோர் இத்தகைய வேலைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகிறார்கள். விபச்சாரம் செய்பவர்களுக்கு இது மரத்துப் போன விஷயமாக இருக்கலாம். போர்னோகிராபி (உடலுறவு காட்டும் படங்கள்) பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் சிடிகளையும் தடை செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர்.

வழக்கம் போல வாய்தா வாங்கிய அரசு வக்கீல்: சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெய் சிங் கூறுகையில், “இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை; இது பற்றி பல்வேறு அமைச்சகங்கள் மட்டத்தில் விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது”, என்றார்[7]. எந்த விஷயமக இருந்தாலும், அரசு எவ்வளவு சோம்பலில் இருக்கிறது அல்லது கீழுள்ளவர்கள் ஆட்டி வைக்கப் படுகிறார்கள் என்பதனை இவரைப் போன்ற வக்கீல் நிலையிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
வெளிநாட்டு இணை தளங்களை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்: மனுதாரர் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் கூறியதாவது: “இந்தியாவில் இன்டர்நெட் மூலம் ஆபாச இணையதளங்களை அனைவரும் மிக எளிதாக பார்க்க முடிகிறது. இதனால் சிறுவர்கள் சீர்கேடு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளி நாட்டு இணையதளங்கள் அதிகமாக உள்ளன. இவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்[8]. இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாகக் காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணையதளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது. டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆபாச படங்களை பார்த்து தான் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆபாச வீடியோக்களை பார்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், இணையதள சட்டங்கள் உள்ளன. இதை தடை செய்வதற்கு வழி இல்லை. மார்க்கெட்டில், 20 கோடி ஆபாச வீடியோக்கள் சாதாரணமாக கிடைக்கின்றன. இவை, இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு சுற்றுக்கு விடப்படுகின்றன”, இவ்வாறு அவர் வாதிட்டார்.

சர்வதேச ஆபாச இணை தளங்களை, தடைசெய்வது கஷ்டமான காரியம்: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: “ஆபாச இணையதளஙகளில், குறிப்பாக குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும். இதற்கு, மத்திய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதற்குள் மத்திய அரசு தன் முடிவை அறிவிக்க வேண்டும்…………சர்வதேச ஆபாச இணையதளங்களை, தடை செய்வது கஷ்டமான காரியம்; இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசித்து, முடிவு செய்வதற்கு இன்னும் சில காலம் ஆகும்”, என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது[9].

இந்திய நலன்களுக்கு எதிராக உள்ள அமெரிக்க போர்னோகிராபி சட்டங்கள்: டெலிகம் துறை இணைதள சேவைகள் தரும் கம்பெனிகளை குறிப்பிட்ட 39 தளங்களை தடுக்குமாறு ஆணையிட்டுள்ளது. இணைதளக் குழுக்கள் தாம் இத்தகைய படங்களை தகவிரக்கம் செய்து பரிமாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் போர்னோகிராபி பார்ப்பதுதான் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருக்கிறதே தவிர, வயது வந்தவர்கள் பார்க்கும் போர்னோகிராபி தடை செய்யப்படவில்லை. தடை செய்யப் பட்ட இணதளங்கள் அமெரிக்க சட்டப் பிரிவுகளின் கீழ் [the 18 USC 2257 rule enforced by the US] இந்தியாவிற்கு வெளியிலிருந்து செயல்படுகின்றன[10]. அதாவது இந்தியா ஒன்றும் செய்யமுடியாது.

இந்தியாவின் நிலை, இந்தியாவைத் தாக்கும் சக்திகள்: பாரம்பரிய கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் கொண்ட இந்தியர்கள் இந்த அளவிற்கு சீரழிந்துள்ளார்களா என்று கவனிக்கும் போது மிக்க வருத்தமாக இருக்கிறது. முன்பு முகலாயர்-முஸ்லிம் படையெடுப்புகள், இந்திய சமூகத்தின் சீரழிவு கற்பழிப்பு, அடிமை, ஹேரம் போன்ற முறைகளில் வெளிப்பட்டன. அவர்களது சித்திரங்கள், ஓவியங்கள் அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஐரோப்பியர் ஆதிக்கம் செல்லுத்தியபோது, இந்தியப் பெண்மணிகளை வேலைக்கு வைத்துக் கொண்டு செக்ஸ் ரீதியிலும் சீரழித்தனர். “ஆயாக்கள்” அவ்வாறு உருவாக்கப்பட்டார்கல். பிறகு “ஆங்கிலோ-இந்திய” என்ற கலப்பினம் அல்லது மனிதக்குழுமம் தோற்றுவிக்கப் பட்டது. இதெல்லாம் செக்ஸ்-காரியங்களின் அவலங்கள் தாம். இன்று, முகலாயர்-முஸ்லிம், ஐரோப்பியர்களுக்குப் பிறகு அமெரிக்கர் வந்துள்ளனர். வியாபார விஷயத்தில் போல இவ்விவகாரங்களிலும் இந்தியாவை கெடுக்க, சீரழிக்க திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

தடுப்பது எப்படி?: முகலாயர்-முஸ்லிம், ஐரோப்பியர்கள் எப்படி இந்தியர்களை அடக்கி ஆள, இந்திய காரணிகளை குறைகூறி தூஷித்தார்கள்ளோ, அதே வேலையை இப்பொழுது அமெரிக்கா செய்து வருகிறது[11]. அமெரிக்காவின் அடிவருடி இந்தியர்களும் சேர்ந்துள்ளனர். பெண்மை காக்கப்படவேண்டும் என்பதால்தான் அவர்கள் பாதுகாக்கப் பட்டார்கள். ஆனால், அம்முறைகள் திரித்துக் கூறப்பட்டன. ஏளனம் செய்யப்பட்டன; அவதூறாகப் பேசப்பட்டன; தூஷிக்கப்பட்டன. விளைவு இந்திய பெண்மை முன்னேற்றம், நாகரிகம், கட்டுக்கடங்காத உரிமைகள், சுதந்திரம் என்ற முறைகளில் சமூகநெறிகளிலிருந்து மட்டுமல்லாது, உடைகளினின்றும் விடுப்பட்டு முன்னேறிவிட்டதால், நிர்வாணத்தின் நிலையை அடைந்துள்ளனர். படுக்கறையில் செய்வதை ரெயில்களில், பொது இடங்களில் செய்யப்படுகின்றன. அவற்றையும் படம் பிடித்து காட்டப்படுகிறது. “ஒரு ஆண்-ஒரு பெண் உறவு” நிலை மீறும்போதே, தாம்பத்தியம் தெருக்களில் வந்து விடுகிறது. இரண்டாவது உறவு என்பது நிச்சயமாக மனங்களை வதைத்து, மறைத்து, மரத்த நிலையில் வாழும் வாழ்க்கைத்தான் ஏற்படுகிறது. நாகரிகமென்ற பெயரில் “சேர்ந்து வாழும்” வாழ்க்கையும் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் மறுபடியும் தங்களது முறைகளைத் தான் கையாள வேண்டும். அதாவது, நிச்சயமாக மதநம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். தாய்மையை-பெண்மைய மதிக்க வேண்டும். இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல. முக்கியமாக பெண்கள் தங்களது பெண்மையை, தாய்மையைப் போற்றிக் காக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 13-07-2013


[2] In a shocking incident that came to light, footage of couples getting intimate in Delhi Metro has been uploaded on several porn sites. A Central Industry Security Force (CISF) told on request of anonymity that over 250 clips of couples in near-empty Metro trains have been made into two to eight minute videos and uploaded on the porn sites, the bulk of which has been uploaded in 2011. The leakage of such a video from the control room has raised several questions on the Delhi Mtero Rail Corporation (DMRC). Amid the embarrassing situation, a DMRC official said that CISF was to blame for the leakage as they monitor the CCTV footage. Meanwhile CISF official said that they are just the monitoring agency and the DMRC is the one responsible for controlling the database into which the CCTV footage goes, therefore, claiming that the leak happened at their end.

http://daily.bhaskar.com/article/DEL-shokcing-dont-get-intimate-in-delhi-metro-couples-feature-on-porn-sites-4315048-PHO.html?seq=5

[7] தினமலர், ஆபாசஇணையதளங்களைதடைசெய்யமத்தியஅரசுக்குசுப்ரீம்கோர்ட்கெடு,  ஜூலை 12, 2013, சென்னைப் பதிப்பு.

[10] In an order dated June 13, Department of Telecom (DoT) has directed internet service providers (ISPs) to block 39 websites. Most of them are web forums where internet users share images and URLs to download pornographic files. But some of these websites are also image hosts and file hosts, mostly used to store and share files that are non-pornographic. While watching or distributing child pornography is illegal in India, watching adult pornography is not banned. The blocked websites are hosted outside India and claim to operate under the 18 USC 2257 rule enforced by the US. The rule specifies that producers of pornographic material are required to retain records showing performers were over 18 years of age at the time the video or image was captured.
http://timesofindia.indiatimes.com/tech/tech-news/internet/Centre-to-SC-Difficult-to-ban-international-porn-websites/articleshow/21036090.cms

[11] இங்கு அமெரிக்காவை குறைகூறுவது, விமர்சிப்பது, இந்திய சமூகத்தை சீரழிக்கும் வேலைகளில் செய்யப்படுகிறது. பொதுவாக மனிதகுலத்திற்கு உபயோகப்படும் விஞ்ஞான-தொழிற்துறைகளைப் பற்றி குறைகூறவில்லை.