Archive for பிப்ரவரி, 2014

நிர்வாணம், அரை நிர்வாணம், ஆபாசம், பாலியல் தூண்டுவது முதலியவை யாவை – உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு

பிப்ரவரி 10, 2014

நிர்வாணம், அரை நிர்வாணம், ஆபாசம், பாலியல் தூண்டுவது முதலியவை யாவை – உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு

ஸ்டெர்ன் அட்டைப் படத்தில் வந்த புகைப்படம் 1994

ஸ்டெர்ன் அட்டைப் படத்தில் வந்த புகைப்படம் 1994

ஆபாச படத்தை எதிர்த்து வழக்கு போட்ட வக்கீல் (1993)[1]: ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் [Boris Becker], திருமணம் செய்ய நிச்சயித்திருந்த கறுப்பு நிறப்பெண் பார்பரா பெல்டஸ் [Barbara Feltus]வுடன் 1993–ம் ஆண்டு நிர்வாண ‘போஸ்’ கொடுத்தார். அந்த புகைப்படத்தை அப்பெண்ணின் தந்தையே எடுத்திருந்தார். போரிஸ் பெக்கர் நிறவெறிக்கு எதிரானவர் என்பதனால், ஒரு கருப்புப் பெண்ணை மணந்து கொண்டதுடன், அத்தகைய வேறூபாடு கூடாது என்று தெரிவிக்க அவ்வாறு போஸ் கொடுத்தார். அதை “ஸ்டெர்ன்” [German magazine ‘Stern’ ] என்ற ஜெர்மானிய நாளிதழ் வெளியிட்டது[2].

போரிஸ் பெக்கர் பார்பாரா

போரிஸ் பெக்கர் பார்பாரா

இதனை ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் [“Sports World”] என்ற பத்திரிக்கை இந்தியாவில் வெளியிட்டது [Issue  15 dated 05.05.1993]. பிறகு ஆனந்த பஜார் பத்திரிக்கை என்ற நாளிதழும் இரண்டாவது பக்கத்தில் [06.05.1993] வெளியிட்டது. இதனால் அந்த நாளிதழுக்கு எதிராக ஆலிபூர் கோர்ட்டைச் சேர்ந்த ஒரு வக்கீல் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 292ன் கீழ் [Section 292 of the Indian Penal Code] வழக்கு பதிவு செய்தார். மாஜிஸ்ட்ரேட் கோர்ட் அது ஆபாசமானது, இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கக் கூடியது என்று தீர்ப்பளித்து அப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு தடை விதித்து, அதற்கு காரணமாக இருந்த நபர்களின் மீது தண்டனையும் விதித்தது [The Magistrate held  the  accused  persons  to  be examined under Section 251 Cr.P.C. and ordered that they would  be  put  to face  the  trial  for  the  offence  punishable  under  Section   292   IPC alternatively under Section 4  of  the  Indecent  Representation  of  Women (Prohibition) Act, 1986.]. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தனர் [Aggrieved by this accused persons preferred a Criminal Revision No.1591 of 1994 before the High Court of Calcutta under Section 482  Cr.P.C. for quashing the proceedings in Case No.C.796 of 1993 (corresponding to  T.R.  No.35 of 1994) pending before the learned Judicial Magistrate Court, Alipore].

1972 simi gerewal siddharth film nude

1972 simi gerewal siddharth film nude

உச்சநீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது (2014): ஆனால் உயர்நீதி மன்றம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. கீழ்கோர்ட்டின் தீர்ப்பை ஆமோதித்தது [The High Court, however, did not appreciate all those contentions and declined to quash the proceedings under Section 483 Cr.P.C. Accused persons then preferred an appeal to The Supreme Court against the Order of The High Court.]. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாளிதழ் நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்குத்தான் இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நிர்வாணம் என்பது ஆபாசம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஆண்குறி வழிபாடும், லிங்க வழிபாடும் - I

ஆபாசம்  என்று  ஒன்றை  சொல்ல  வேண்டுமானால்,   அது  பாலுணர்வு   கிளர்ச்சியை  தூண்டுவதாக  அமைந்திருக்க  வேண்டும்தீர்ப்பு: இந்த மனுவை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் விசாரித்து, நாளிதழ் நிறுவனம் மீதான வழக்கை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது[3]: “ஆபாசம் என்று ஒன்றை சொல்லவேண்டுமானால், அது பாலுணர்வு கிளர்ச்சியை தூண்டுவதாக அமைந்திருக்க வேண்டும். பாலுணர்வினைத்தூண்டும் வகையில் அமையாதது வரையில் அல்லது செக்ஸ் விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்காததுவரையில், ஒரு பெண்ணின் நிர்வாணம் அல்லது அரை நிர்வாணப்படம் ஆபாசம் என கருத முடியாது.

IPL Hottie Gabriella Demetriades4

IPL Hottie Gabriella Demetriades4

எது  ஆபாசம் என்று நிர்ணயிக்கப்  படும்?: ஆபாசம் என்றால் அந்தப்படம் மனித மனதைக்கெடுப்பதாக அமைந்திருக்க வேண்டும். செக்ஸ் உணர்வை தூண்டி படத்தை பார்க்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆபாசம், உடல் அமைந்திருக்கும் நிலையை பொறுத்தும் அமையும். அது, படம் அமைந்ததின் பின்னணியையும் பொருத்ததாகும். பாலுணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்துகிற ஒன்றைத்தான் ஆபாசம் என கருதவேண்டும். ஆனால் ஆபாசம் என்பதை ஒரு சராசரி மனிதரின் பார்வையில் இருந்துதான் முடிவு செய்ய வேண்டும். சமகால சமூக நிலைக்கு ஏற்பவும் எது ஆபாசம் என்பதில் மாறுபாடு உண்டு. நாம் இப்பொழுது 2014ல் இருக்கிறோம், 1994ல் இல்லை. ஒரு கட்டத்தில் ஆபாசம் என தோன்றுவது இன்னொரு கட்டத்தில் அப்படி தோன்றாமலும் போய் விடுவதும் உண்டு.

Gabriella Demetriades1

Gabriella Demetriades1

போரிஸ்  பெக்கர்  விவகாரம்: இந்த வழக்கை பொறுத்தமட்டில், இனவெறிக்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்தான் போரிஸ் பெக்கர், தனக்கு நிச்சயித்திருந்த பெண்ணுடன் நிர்வாணமாக காட்சி தந்திருக்கிறார். இனவெறி என்ற சமூக அவலத்தை மனித சமுதாயத்தில் இருந்து ஒழித்து, அன்பினை மேலோங்கச்செய்ய செய்தி விடுக்கும் வகையில்தான் அவர் அப்படி நடந்துகொண்டுள்ளார். அந்தப்படம் அன்பைத்தான் வளர்க்கிறது. நிறம் கொஞ்சம் பிரச்சினைதான். ஆனால் அன்பு அதைவிட உயர்வானது. இங்கே சிவப்பு நிற மனிதருக்கும், கறுப்பு நிற பெண்ணுக்கும் இடையே திருமணத்துக்கு அன்பு வழி நடத்தி இருக்கிறது[4].இது, பாராட்டத்தக்க விஷயம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Gabriella Demetriades-2

Gabriella Demetriades-2

ஹிக்லின்  பரீட்சை இங்கு செல்லாது: ஹிக்லின் பரீட்சை [UK court’s Hicklin Test] என்ற சட்டரீதியில் ஒன்றுள்ளது, அதைவைத்துதான் இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஆபாச வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவார்கள். 1868ம் தீர்ப்பின்படி ஆபாசம் [obscenity] என்பது தீர்மானிக்கப்படும். ஆனால், நீதிபதிகள் அதனை நிராகரித்து அந்த 146-வருட பழமையான கொள்கையை ஏற்றுக் கொள்ளமுடியாது. பார்பாரவின் மார்பகங்கள் போரிஸ் பெக்கரின் கைகள் மறைத்திருந்தன. மேலும் அப்படத்தை அப்பெண்ணின் தந்தையே எடுத்திருக்கிறார்.  இதனால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. முழுதீர்ப்பை இங்கு படிக்கலாம்[5].

முற்றும் துறந்த நிலையும், நிர்வாணமும்: இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் நிர்வாணம் புதியதல்ல, அது தெய்வீகமாகவே ஆராதிக்கப் பட்டது / படுகிறது. ஏன் உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்து வந்துள்ளது. திகம்பர ஜைன சந்நியாசிகள் இன்றும் அவ்வாறே உல்லா வந்து கொண்டிருக்கின்றனர். விபூதியைப் பூசிய சைவ சந்நியாசிகள், அகோரிகள் முதலியோரும் அவ்வாறே வாழ்ந்து வருகின்றனர். அவதூதர் எனப்படுகின்றவர்கள் அவ்வாறே அமைதியாக இருக்கின்றனர். நிர்வாண சிலைகளுக்கு, சிற்பங்களுக்கு, விக்கிரங்களுக்கு அளவே இல்லை. ஆனால், புரிந்து கொள்ளாதவர்கள், குறிப்பாக மாற்று மதத்தினர், நாத்திகர்கள், அவ்வாறு சொல்லிக்கொள்பவர்கள் குறைகூறுவதும், விமர்சிப்பதும் வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது. ஆதாம்-ஏவாள் கதையே நிர்வாணத்தை மறைக்க முற்பட்டபோது, ஜேஹோவாவிடம் சாபம் பெறுவதாக உள்ளது.

திரையில், திரைமறைவில் அரங்கேறி வரும் நிர்வாணங்கள், ஆபாசங்கள்: இருப்பினும் இந்திய மற்றும் இந்திய-அல்லாத நிர்வாணத்தை பாகுபடுத்திக் காட்டமுடியும். பாலியல் ரீதியில் கோக்கும் மனங்களுக்கு நிர்வாணம் ஆபாசபமாகவே தோன்றும். பல ஆண்டுகளாக நடந்து வந்த பெண்களின் நிர்வாண பூஜை தடை செய்யப்பட்டது. ஆனால், ஐந்து நடசத்திர மற்றும் பப்-ரெஸ்டாரென்டுகளில் அரைநிர்வாணம், கிளப்-டான்ஸ் போன்றவை அனுமதிக்கப் பட்டு நடந்து வருகின்றன. இக்கால இளம் பெண்கள் மற்றும் இதர பெண்களும் கவர்ச்சியாகவே ஆடைகளை உடுத்தி வருகிறார்கள். டி-சர்ட், குட்டை பாவாடை / ஸ்கர்ட், பேன்ட்-சர்ட் போன்றவற்றை அணிந்து கொண்டு உடலின் பகுதிகள் தெரியும்படித்தான் பொது இடங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாக்களில் சொல்லவே வேண்டாம், பாட்டு, ஆட்டம், குத்தாட்டம் என்ற பெயர்களில் கேவலமாக ஆபாசங்கள் திரையேறியுள்ளன. இந்நிலையில் நிர்வாணம், அரை நிர்வாணம், ஆபாசம், பாலியல் தூண்டுவது முதலியவை எதுவரை, எப்படி இருக்கலாம், எங்கு மீறும் போது தடுக்கலாம், எதிர்க்கலாம் என்று வரையறை செய்யப்படவில்லை.

வேதபிரகாஷ்

© 10-02-2014


[4] தினத்தந்தி, நிர்வாணம் என்பது ஆபாசம் அல்ல, சுப்ரீம் க்கோர்ட் பரபரப்பு தீர்ப்பு, பிப்ரவரி, பதிவு செய்த நாள் : Feb 10 | 04:00 am