Archive for the ‘வாதம்’ Category

ஆண்குறி வழிபாட்டில் இந்தியாவுக்கு, இந்துமதத்திற்கு எதிரான வாதம் ஏன்?

ஓகஸ்ட் 29, 2016

ஆண்குறி வழிபாட்டில் இந்தியாவுக்கு, இந்துமதத்திற்கு எதிரான வாதம் ஏன்?

Terracotta plaques showing sexual activities of Babylonian civilization dating cack to 2000-1500 BCE

ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அடையாளம் காணுவதில் சிக்கல்: ஜைனர்களை விட, பௌத்தர்களின் தாக்கத்திற்கு, எகிப்து மற்றும் ஐரோப்பா வரை அகழ்வாய்வு சான்றுகள் பல கிடைத்துள்ளன. லக்ஸாரில் ஒரு புத்தரின் சிலை காணப்படுகிறது. அதாவது, அதன் தேதி 1600 BCE காலத்திற்கு செல்கிறது. அதேபோல ஐரோப்பாவில், பல இடங்களில் பௌத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன[1]. வடமேற்கு இந்தியாவில், சிந்து முதல் எகிப்து வரை பௌத்த விஹாரங்கள், சிற்பங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், கிரேக்கர்களின் நாகரிகம், கலாச்சாரம் முதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, பௌத்த தாக்கம் காணப்படவில்லை, மாறாக, ஜைனர்களின் தாக்கம் காணப்படுகிறது. ஜைனமுனிவர்கள் இன்றளவும், திகம்பரத்தைப் பின்பற்றி வருகின்றனர். ஜைன சிற்பங்கள், குறிப்பாக தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிர்வாணமாகவே காணப்படுகின்றன. ஆனல், ஜைனர்கள் அவற்றை பூஜித்து வருகின்றனர்.

17761_phallic_processions

அலெக்சாந்தருடன் வாதிட்ட நிர்வாண சந்நியாசிகள் யார்?: அலெக்சாந்தர் சில நிர்வாண சாமியார்களை (Gymnophists) சந்தித்து, அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டான் என்று சில கதைகள் கூறுகின்றன. “அலெக்ஸ்சாந்தர் ரோமேன்ஸ்” [Alexander Romance] என்ற சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகள் ஆதாரமான உள்ள புனைந்த கதைகளை வைத்து அத்தகைய வாதங்கள் செய்யப் பட்டன. அந்த நிர்வாண சாமியார்கள் யார் என்று குழப்பம் இருக்கிறது. அவர்கள் “பிராமணர்கள்” என்றும் சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர்[2]. ஆனால், ஜைன, யூத, கிருத்துவ சிற்பங்களில் உள்ள நிர்வாணம் அவர்களை உண்மையறிய வைத்துள்ளது[3]. முன்பு நிர்வாண சிற்பங்கள், பாலியல் ரீதியிலான சித்திரங்கள்-சிலைகள் முதலியவற்றை உருவாக்கி விட்டு, பிறகு ஒரு நிலையில் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்கத் தக்கது. அவர்களிடையேயும் நிர்வாணத்தைப் பற்றிய வாத-விவாதங்கள் ஏற்பட்டுள்ளன[4].

MAN-Herma - Hermes

ஞாஸ்டிக், எஸ்ஸென், வெள்ளையுடை உடுத்திய பிரம்மச்சாரி குழுக்கள்: வெள்ளையுடை அணிந்தவர்களும் பல தத்துவ-ஞானக் குழுக்களுடன் ஒப்பிடப்பட்டார்கள். ஞானத்தையே தேடும், விரும்பும் அவர்கள் எல்லாவற்றையும் துறந்தவர்கள், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடுப்பவர்கள், தாவிர உணவையே  உட்கொள்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, ஞான், ஞானம், ஞானி, ஞானத்துவம் [Gnostikos, gnosis, Gnostics, Gnosticism] என்றெல்லாம் சிலகுழுக்கள் அடையாளம் காணப்பட்டன. தவிர, எஸ்ஸென் என்ற குழுவும் [Essenes] அத்தகைய குணாதைசயங்கள் கொண்டுள்ளது அறியப்பட்டது. இவர்கள் எல்லோரும் வெள்ளையாடைகள் உடுத்தினர் என்றும் விவரிக்கப்பட்டது. ஆகவே, இவர்கள் எல்லாம், “ஸ்வேதம்பரர்” வெள்ளையாடை உடுத்திய குழுக்கள் என்று சொல்லலாம். அதாவது, ஜைனர்களைப் போன்றவர்கள், ஆனால், திகம்பர-நிர்வாண சந்நியாசிகளுடன் மாறுபட்டவர்கள்.

கிரேக்க சிற்பங்கள் - இதெல்லாம் கலைதான்

இடைக்காலத்திலும் பழைய நம்பிக்கைகள் தொடர்ந்தது: இடைக்கால கத்தோலிக்கக் கிருத்துவ வழிப்பாட்டில் ஆண்-பெண் உறுப்பு வழிப்பாடு அதிகமாகவே இருந்தது. நெதர்லாந்து பகுதிகளில் கிடைத்த, உலோக பொருட்கள், இதனை எடுத்துக் காட்டுகிறது. இரு கால்களுக்கிடையே ஆண்குறி, பெண்குறியை மூன்று ஆண்குறி மனிதர்கள் தூக்கிச் செல்வது, ஒரு பெண் பெரிய ஆண்குறியைத் தள்ளிச் செல்வது போன்றவை அவற்றில் சித்தரிக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் பதக்கம் போன்று நகைகளுடன் கழுத்தில் அணியப்பட்டன. பொதுவாக குழந்தை பாக்கியம் வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டும், போன்ற நோக்கில் அவை அணியப்பட்டன. பிரபலமாக இருந்ததால், அவை உற்பத்தி செய்யப் பட்டு மக்களிடையே விற்கப்பட்டதும் தெரிகிறது. மக்கள் இவற்றை அதிகமாகவே உபயோகப்படுத்தி வந்தது தெரிகிறது[5]. மேரி, அகதா, பார்பரா [Mary, Agatha and Barbara] போன்ற தேவதைகளை வணங்கி வந்தாலும், இவற்றையும் மதித்துப் போற்றி வந்தனர்[6].  இவையெல்லாம், 13-14ம் நூற்றாண்டுகளில் கிருத்துவம் இன்னும் மக்களிடம் முழுவதுமாக பிரபலமாகவில்லை என்றதைத்தான் காட்டுகிறது. மேலும், கிருத்துவம் அறிமுகப்படுத்தப் பட்டாலும், முந்தைய மதநம்பிக்கைகளில் மக்கள் ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய ஈடுபாடு அவர்களின் மீது திணிப்பதால் உண்டானதல்ல, ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாகப் பின்பற்றிவந்த நம்பிக்கைகளின் மீது ஆதாரமக இருந்தது என்பதும் அறியக்கூடியதாக உள்ளது.

The Triumph of the Phallus (1700–1750).3

நவீனத்துவ வாத-விவாதங்கள்-விளக்கங்கள்: நிர்வாணம் இறப்பிலிருந்து இறக்கும் வரை உள்ள மனிதனின் நிதர்சனம் ஆகும். விஞ்ஞான ரீதியில், மனித தோற்றத்தை விளக்கும் முறைகளில் மனிதனை நிர்வாணமாகவே காட்டப்படுகிறான். பாம்பைப் பார்த்து ஆதாம்-ஏவாள் பயந்து, இலை-தழைகளை வைத்து தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டனர் போன்ற கதைகளை நம்பும், அறிவுஜீவிகள் கூட, பிறகு தான், நிர்வாணம் ஒவ்வாதது என்று வாதிக்க ஆரம்பித்தனர். ஆனால், வேறு இடங்களில், மறுபடியும் போற்ற செய்தனர். நடிகைகளின் நிர்வாணத்தை ரசிக்கும் அந்த வகையறாக்கள், இன்றும் ஜைனமுனிவர்களின் நிர்வாணத்தைக் கொச்சைப்படுத்துகின்றன. ஆனால், சாமிக்கு டிரஸ் கோட் உண்டா என்றும் கேட்கின்றன. அதாவது, அவர்களது முரண்பாட்டை அதிலே எளிதாகக் கண்டு கொள்ளலாம். ஒருநிலை இல்லாத, மாறி-மாறி விதண்டாவாதம் செய்வதால் தான், அவர்களின் நிலைப்பாடு உறுதியாக இல்லை. எந்த நிர்வாணத்தை ஆதரிப்பது-எதிர்ப்பது என்று தெரியாத நிலையில் உள்ளார்காள். போதாகுறைக்கு, எழுதுவதில், பேசுவதில், ஆராய்ச்சி செய்வதில், தேவையானது-அதாவது அவர்களின் வாதத்திற்கு ஆதரவாக உள்ளது என்றால் எடுத்துக் கொள்வது, அதே நேரத்தில், பாதகமாக இருக்கிறது என்றால் மறைத்து விடுவது போன்ற பாரபட்சம் மிக்க போக்கும் இருப்பதால், உண்மைக்கு வராமல் வாதித்துக் கொண்டே இருப்பர். செக்யூலரிஸம் என்றாலும், ஒருபக்கம் சாய்வர், அதாவது, இந்துமதத்தை எதிர்ப்பர்.

Vulva phallic erotic badges

மேற்கண்ட குறிப்புகளிலிருந்து, கீழ்கண்ட முடிவுகள் பெறப்படுகின்றது:

  1. பாபிலோனிய, அசிரிய, எகிப்து, ரோமானிய, கிரேக்க ஆண்- உறுப்பு மற்றும் பெண்-உறுப்பு வழிபாடு, இந்திய முறையுடன் ஒப்பீடு செய்யமுடியாது.
  2. ஜைன திகம்பர தாக்கம், நிர்வாண சிற்பங்கள் அமைப்பு முதலியவற்றை வைத்து, கிரேக்கர் மீதான ஜைன தாக்கத்தை அறியலாம்.
  3. ஆண்குறிக்கு கிரேக்க மற்றும் கிரேக்க மின்னோடி நாகரிகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது, ஜைனத்துடன் ஒத்து வருகிறது.
  4. டெலோஸ் கோவிலில் ஆண்குறி அளவு பெரிதாக இருந்து, பிறகு குறைகிறது. ஜைனத்தில், இடைக்காலத்திற்கு பிறகு, சிற்பத்தின் அளவே பெரிதாகிறது.
  5. ஜைனதாக்கம் கிரேக்கத்தில் காணும்போது, பழங்கால இந்தியாவில், அவர்களது தாக்கம் மறைகிறது.
  6. இடைக்காலத்தில், ஜைனர்களின் தாக்கம் மறுபடியும் இந்தியாவில் அதிகமாகும் போது, கிரேக்க நாகரிகம் ஏற்கெனவே மறைந்து விடுகிறது.
  7. ஆனால், கிருத்துவம் வளர ஆரம்பிக்கிறது, அதில் அதே நிர்வாண சின்னங்கள் தகவமைத்துக் கொள்ளப்படுகின்றணா.
  8. மேரி – பாபிலோனிய, அசிரிய, எகிப்து, ரோமானிய, கிரேக்க உருவங்களில் பலவாறு தோற்றமளித்து, சித்திரங்களில், சிற்பங்களில் மாறுபடுகிறாள்.
  9. ஆனால், ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து உருவம் நிலையற்றதாகி, குழப்பமடைகிறது.
  10. ஆண்-பெண் இணைப்புகளில், கலவைகளில், குழப்பங்களில், திரியேகத்துவம் முதலியவை நுழைக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

29-08-2016

three phalli bearing a crowned vulva in a procession, 1375-1450

[1]  Donald A Mackanzie, Pre-Christian Buddhism in Great Britain and Ireland,  Blackie and Son Ltd, 1928.

[2] Stoneman, Richard. “Naked philosophers: the Brahmans in the Alexander historians and the Alexander Romance.” The Journal of Hellenic Studies 115 (1995): 99-114.

[3] Roth, Gustav. “Aniconic and Iconic Tendencies in Jainism, Judaism and Christianity.” Studies in Art and Archaeology of Bihar and Bengal (1989): 1888-1988.

[4] Poliakoff, Michael. “” THEY SHOULD COVER THEIR SHAME”: ATTITUDES TOWARD NUDITY IN GRECO-ROMAN JUDAISM.” Source: Notes in the History of Art 12.2 (1993): 56-62

[5] http://www.medievalbadges.org/mb_insignes_UK.html

[6] Sebastiaan Ostkamp, The world upside down. Secular badges and the iconography of the Late Medieval Period: ordinary pins with multiple meanings, Journal of Archaeology in the Low Countries 1-2 (November 2009)

 

ஆண்- குறி மற்றும் பெண்-குறி வழிபாடு பற்றிய சர்ச்சை – சரித்திர ரீதியில் ஆதியிலிருந்து அலசல்!

ஓகஸ்ட் 29, 2016

ஆண்குறி மற்றும் பெண்குறி வழிபாடு பற்றிய சர்ச்சை – சரித்திர ரீதியில் ஆதியிலிருந்து அலசல்!

Babylonian erotic sculpture

இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியது எப்படி, ஏன்?: இந்த உண்மகளையெல்லாம் மறைத்துதான், இப்பொழுது இந்துமதம் தாக்கப்பட்டு வருகிறது. முகலாயர் மற்றும் ஐரோப்பியர்கள் இங்கு வந்தபோது, அவர்கள் பார்த்தவற்றையெல்லாம் தமது நாகரிகங்களில் இருப்பது போலவே ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டனர். முதலில் இந்தியா தான் தமது கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் என எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்று போற்ற ஆரம்பித்தார்கள். ஒரு நிலையில் ஆதரிப்பது-எதிர்ப்பது என்று அவர்கள் இரண்டாகப் பிரிந்தனர். ஆனால், பிறகு, தமது மதங்களுக்கு எதிராக அவை போகின்றன என்ற அறிந்தபோது, ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தனர், விவரங்களை திரித்து எழுத ஆரம்பித்தனர். இந்தியாவிலிருந்து தான் எல்லா ஞானமும் பெறப்பட்டது என்பதை மாற்றி, இந்தியா தான் எல்லாவற்றையும், மற்ற நாகரிகங்களிலிருந்து கடனாகப் பெற்றது. கிரேக்க, முகமதிய மற்றும் ஐரோப்பிய தாக்கத்த்ங்களினால் தான், எல்லாவற்றையும் பெற்று ஞானமடைந்தார்கள், அறிவு பெற்றார்கள் என்று மாற்றி எழுத ஆரம்பித்தார்கள். இதனால் தான் 19-20 நூற்றாண்டுகளில் அவர்களிடையே நடந்த வாத-விவாதங்கள், ஆராய்ச்சிகள், சரித்திரம் எழுதும் முறை முதலியவற்றை கவனிக்கும் போது அத்தகைய முரண்பாடு, பாரபட்சம் மற்றும் இந்திய எதிர்ப்பு சித்தாந்தத்தின் மூலங்களை கவனிக்கலாம். சுதந்திரத்திற்குப் பிறகு, அது பல சித்தாந்தங்களின் கூட்டாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Erotic Roman Bas Relief Sculpture of a man & woman having sex Pompeii. 1st Cent AD, Naples Archaeological Museum

பெண்ணுறுப்பு, பெண்குறி வழிப்பாடு: பாபிலோனிய, அசிரிய, எகிப்திய, கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில் பெண்ணுறுப்பு வழிபாடு இருக்கத்தான் செய்தது. ஏனெனில், தாய் வழிபாடு அபரீதமாக இருந்த நிலையில், பெண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நிலை உண்டானது. இருப்பினும் பெண்கள் எளிதில் பாலியல் ரீதியில் தாக்குதலுக்கு உட்படும் நிலையில் இருந்ததால், அவர்கள் சம்பதப்பட்டவை புனிதமானவை என்று பாவிக்க ஆரம்பித்தார்கள். இதனால், ஒரு பக்கம் ஆதரவு, மதிப்பு, தெய்வீக நிலையில் வைத்தல் என்றும், இன்னொரு பக்கத்தில் பெண் சந்தோசத்திற்கு, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு, எல்லா வேலைகளையும் செய்வதற்கு என்றும் வைக்கப்பட்டது. பெண்ணுறுப்பு “வல்வா”, “வெகைனா”, “வீனஸ்” [vulva, vagina] என்றேல்லாம் குறிப்பிடப்பட்டது[1].  ஐசிஸ், வீனஸ் [Isis, Venus] போன்ற தேவதைகள் / பெண் கடவுளர்களுடன் தொடர்புப் படுத்தப்பட்டது[2]. அது மட்டுமல்லாது, அம்பே [Iambe], பைபோ [Baubo], அனாசிமா, அனாசிர்மோஸ் [Anasyma, Anasyrmos], திலுகை [Dilukai, dilugai], நின்–இம்மா [Nin-imma], ஷிலா-ன-கிக்ஸ் [Sheela-na-gigs] போன்ற தேவதைகள் / பெண் கடவுளர்களுடன் தொடர்புகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். இனி, ஒவ்வொன்றையும் காண்போம்.

Iambe - granddaughter of Hermes, and a servant of Metaneira, the wife of Hippothoon.

அம்பே [Iambe, Greek: άμβ] – அம்பே என்ற தெய்வத்தின் வழிபாடு பாபிலோனிய, அசிரிய, எகிப்திய, கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில் பல உருவங்களில் பிரபலமாக இருந்தது. தாய் வழிபாட்டுடன் சம்பந்தப் பட்டிருந்ததால், இது வயறு, கரு, கருவுற்றல் [womb], குழந்தை பெற்றெடுத்தல், வம்ச விருத்தி முதலியவற்றுடன் இணைந்துள்ளது[3]. பான் [Pan] மற்றும் எக்கோ [Echo] என்ற கடவுளர்களுகுப் பிறந்தவள் அம்பே. இவளுடைய கணவன் ஹிப்பத்தோன் [Hippothoon]. கிரேக்க இலக்கியத்தில் நகைச்சுவை இலக்கியம் மற்றும் நாடோடி பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளாள். இணைதளத்தில் காட்டப்பட்டுள்ள சிற்பங்களைப் பார்த்தால், இந்திய சிற்பம் போலவே தோன்றுகின்றன. அம்பே என்ற வார்த்தையும் அப்படியே உள்ளது. இருப்பினும், இந்தியாவில் மரியாதையுடன், சிரத்தையுடன் மற்றும் பக்தியுடன் வழிபடும் பெண்-தெய்வங்கள் அங்கு ஏன் அந்நிலையை அடைந்தன என்று நோக்க வேண்டியுள்ளது. நிர்வாணத்தின் உச்சம் முழுதுறவறமா அல்லது கொக்கோகமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திகம்பர ஜைனத்தின் தாக்கம் கிரேக்க நாகரிகத்தின் மீதிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆவே, ஜைன தாந்திரிக முறைகளை கிரேக்கர்கள் கையாண்டு, துர்பிரயோகம் செய்த நிலையை இச்சிற்பங்கள் காட்டுகின்றன எனலாம்.

Baubo in steatite, an amulet just 4 cms high,

பைபோ [Baubo,  Greek: Βαυβώ]: டெமிதர் [Demeter] தனது மகள் பெர்சிபோன் [ Persephone] காணாமல் போனத் போது, துக்கத்தில் இருக்கும் போது, பைபோ, தமாஷ் செய்து, அவனை சமாதானம் செய்தாளாம். இவள் அம்பே என்றும் அழைக்கப்படுகிறாள். அம்பே மற்றும் பைபோ, ஆபாச-கொக்கோக கவிதைகளில் வருகின்றனர்[4]. டெமிதர்-அம்பே-பைபோ மூவரின் கூட்டு சிலைகளில் / சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன[5]. பொதுவாக பைபோ சிற்பம், ஒரு பெண்ணின் முகத்தை அப்படியே இருகால்களுக்கு மேலாக இருக்கும்படி சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது, கழுத்து முதல் இடுப்பு வரை காணப்படுவதில்லை. இச்சிற்பங்கள் எல்லாம் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. சிலவற்றிற்கு கைகள் இருக்கின்றன, சிலவற்றிற்கு இல்லாமலிருக்கின்றன, அதாவது, உடைக்கப்பட்டிருக்கலாம். ஒன்றில் இடது பக்கம் இசைக்கருவி காணப்படுகிறது. இன்னொன்றில் இரண்டு கால்களையும் அகற்றி, கைகள் கால் முட்டிகளின் மீது வைத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் உள்ளது. இன்னொரு சிற்பத்தில், அதேபோல, ஆனால், கைகள் இரண்டும் பெண்ணுறுப்பின் அருகில் வைத்திருப்பதைப் போலுள்ளது.

A Greek terracotta figurine of Baubo, of the face-in-torso type.holding a lyre from Priene, Anatolia.

அனாசிர்மோஸ் [Anasyma, Anasyrmos][6]: கிரேக்க வார்த்தையன (Ancient Greek: ἀνάσυρμα) composed of anaup oragainst or back, and syrma: skirt, plural: anasýrmata (ἀνασύρματα), also called anasyrmós] இதற்கு பொருள் பெண்குறி அல்லது மற்றும் பின்பக்கங்களைக் காட்டுவது என்பதாகும். ஒரு பெண் தன்னிச்சையாக செய்தால் அழிவைத் தடுக்கலாம் என்ற புராதன நம்பிக்கையோடு, பழங்கால நாகரிகங்களுடன் பிணைந்துள்ளது[7]. இத்தேவதை மிகவும் அழகானவள், ஆனால், ஆணுறுப்புக் கொண்டவள் [Aphrodite]. சிற்பங்களில் ஆடையைத் தூக்கி, ஆணுறுப்பைக் காட்டுவது போல இருக்கும். கிரேக்க நிர்வாணத்தில் இவையெல்லாம் சகஜமாக இருந்தாலும், 19-20ம் நூற்றாண்டுகளில் மறைக்கப்பட்டது.

sumerian goddess of night etc

நின்இம்மா [Nin-imma][8]:  சுமேரிய, பாபிலோனிய, அக்காடிய நாகரிகங்களின் கருவுரச்செய்யும் / உற்பத்தி செய்யும் தெய்வமாகும். நின் – என்றால் தெயவம் மற்றும் இம்மா என்றால் எல்லாவற்றையும் படைத்த, உருவாக்கிய, காரணமாக இருந்த நீர் என்று பொருள் படும். பிறப்பு, படைப்பு போன்ற காரியங்களுக்கு தண்ணீர் அவசியம் என்ற ரீதியில், மற்றும் நீரிலிருந்து தான் இவ்வுலகம் தோன்றியது, போன்ற உண்மைகளை அடக்கியுள்ளது. இவ்வழிபாடு, பெண்ணுறுப்பை தெய்வீகமாக்கி, சின்னங்களை, சிலைகளை உருவாக்கியது.  குறிப்பிட்ட “இரவின் தேவதை” என்ற சிற்பத்தில் பெண்ணுடல், இறக்கைகள், விலங்கின் கால்கள் என்று கலவையுடன் காட்சியளிக்கிறாள்.

A 12th century sheela na gig on the church at Kilpeck, Herefordshire, England

ஷிலாகிக்ஸ் [Sheela-na-gigs][9]: பெண்ணுறுப்பை அளவுக்கு அதிகமாக சித்தரித்து, வீடுகள், கட்டிடங்கள், சர்ச்சுகள் என்று எல்லாவற்றின் நுழைவுவாயில்களின் மேலே காணப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில், சில இடங்களில் இன்றும் காணப்படுகின்றன. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் அதிகமாகக் காணப்பட்டன. இடைக்காலங்களில் காணப்பட்டாலும், இதன் மூலங்கள் பழைய நாகரிகங்களுக்குச் செல்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். இதன் தாக்கம் ஐரோப்பிய மக்களின் மீது அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இன்றும் பெண்ணிய ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி அதிகமாகவே ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

800px-Dilukai_from_the_Caroline_Islands,_Belau_(Palau),_19th-early_20th_century,_Metropolitan_Museum_of_Art

 திலுகை [Dilukai, dilugai][10]: திலுகை என்ற தெய்வத்தின் உருவம், இளம்பெண்களின் உருவமாகும். இது, தலைவர்களின் வீடுகளின் கதவுகளின் மீது காணப்படும். இந்தோனேசியா மற்றும் பாப்வா நியூ கினியா நாடுகளுக்கிடையே, ஆஸ்திரேலிவுக்கு மேலேயுள்ள பலௌவன் தீபகற்பத்தில் [Palauan archipelago] இவை காணப்பட்டன. இங்கும் இது ஒரு தீயதைத் தடுக்கும், திருஷ்டி பரிகார சின்னமாக உபயோகப்படுத்தப் பட்டது.

© வேதபிரகாஷ்

29-08-2016

Iambe - greek lajja gowri at - Persephone

[1] http://www.sacred-texts.com/sex/wgp/wgp03.htm

[2] http://www.sacred-texts.com/sex/wgp/wgp01.htm

[3] Jones, William. On the gods of Greece, Italy, and India., JRAS,  1807.

[4] Graves, Robert (1996). The Greek Myths. volume 1. London: Folio Society. p. 92.

[5] Clement of Alexandria. Translated by Butterworth, G. W. (1919), Loeb Classical Library, volume 92. Cambridge, Massachusetts. Harvard University Press.

[6] https://en.wikipedia.org/wiki/Anasyrma

[7] Anasyrma (Greek ἀνάσυρμα ) refers to the uncovering of the genitals or buttocks in a cultic and magical context, in particular as apotropaic action. So prevails in the mythologies of many cultures the belief that disaster can be averted by the self- certain unveiling of the vulva.http://memim.com/anasyrma.html

[8] https://en.wikipedia.org/wiki/Nin-imma

[9] https://en.wikipedia.org/wiki/Sheela_na_gig

[10] https://en.wikipedia.org/wiki/Dilukai

ஆண்- உறுப்பு மற்றும் பெண்-உறுப்பு வழிபாடு பற்றிய சர்ச்சை – சரித்திர ரீதியிலான அலசல்!

ஓகஸ்ட் 29, 2016

ஆண்உறுப்பு மற்றும் பெண்உறுப்பு வழிபாடு பற்றிய சர்ச்சை – சரித்திர ரீதியிலான அலசல்!

India Gandhi getting blessings from Jaina Muni in 1978

இந்தியாவைப் பற்றிய புரட்டு சரித்திரமும், சித்தாந்திகளின் கூட்டும்: இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் ஆணுறுப்பை, பெண்ணுறுப்பை வழிபடுகிறார்கள் என்று மேனாட்டவர்கள், ஐரோப்பிய-அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் கேலியாக, குறைகூறும் விதத்தில், இந்துக்கள் ஏதோ அநாகரிகமான செயல்களை செய்வது போல எழுதி வந்துள்ளனர்-வருகின்றனர். இந்துமத விமர்சகர்கள், இந்துமதத்தைக் குறை கூறுபவர்கள் மற்றும் இந்து-விரோதிகள் கூட கம்யூனிஸ, செக்யூலரிஸ, நாத்திக, திராவிட போர்வைகளில், தமக்கேயுரிய சித்தாந்தங்களில் அவதூறு செய்வதில் சந்தோசமாகவே இருக்கின்றனர். இந்துக்களில் பெரும்பாலோர், கடந்த 100-200 ஆண்டுகளில் இந்திய சரித்திரம் எவ்வாறு எழுதப்பட்டது, குறிப்பாக இந்துமதத்தை தவறாகச் சித்தரிக்கும் போக்கில் அவ்வாறெல்லாம் எழுதி வைத்தனர் என்பதையும் அறிந்து கொள்ளாமல், வேறு வகையில் விளக்கம் கொடுத்து, காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகக்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், புகழ், பணம், அந்தஸ்து கிடைத்து விட்டால், நாங்கள் எழுதுவது தான் சரி, என்ற அகம்பாவத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இக்கால இளைஞர்கள் முழுவதும் படிக்காமல், அரைகுறை விசயங்களுடன், அடுத்தவர் சொல்வது, மேடைகளில் பேசுவது முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, அவற்றை நம்பி, வாத-விவாதங்களை செய்ய வந்து விடுகிறார்கள். இந்நிலையில், உண்மை நிலை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது.

Sonia Gandhi getting blessings from Jaina Muni

ஐரோப்பியர்அமெரிக்கர்களின் மறைப்புவாதம்: ஆண்- பெண் உறுப்பு வழிபாடு ஆராய்ச்சியில் மேனாட்டவர்கள், ஐரோப்பியர் மற்றும் அமெரிக்கர் பாரபட்சமாகவே நடந்துள்ளனர் என்பது அவர்களது எழுத்துகளினின்று புலப்படுகின்றது.  பழைய நாகரிகங்களை ஆராய்ந்த போது, அவர்களுக்கு அத்தகைய பழக்க-வழக்கங்கள் தம்மிடம் தான் இருந்தன என்று தெரிய வந்தது. லண்டன், பாரிஸ், போன்ற தலைநகரங்களை விடுத்து, உள்ளே சென்றால், அவர்களது பழங்கால, இடைக்கால, ஏன் 19-20 நூற்றாண்டு நாகரிகங்களின் எச்சங்கள் அவர்களது நிலையை எடுத்துக் காட்டுகின்றன. அவர்களது முன்னோர்களின் நிலையையும் மெய்ப்பிக்கின்றது. குளிர்பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் அதிகமான பாலியலில் ஈடுபட்டனர். இதனால், அத்தகைய எண்ணங்கள் இலக்கியம், சித்திரங்கள், சிற்பங்கள் என்று எல்லாவற்றிலும் பிரதிபலித்தன. ஃபல்லிக் வொர்சிப் [phallic worship] ஆண்குறி வழிபாடு என்பதெல்லாம் அவர்களது வழக்கம் என்பதை அதன் மூலங்களை ஆராயும் போது தெரிந்து கொள்ளலாம். ஆனால், மறைப்புவாதம் [negationism] மூலம் மறைத்து, இதற்கெல்லாம் மற்றவர்கள் காரணம் என்பது போல எழுதி வைத்தனர்.

Priapus in different forms

ஆண்குறிஆணுறுப்பு வழிபாடு தோற்றம்: ஆண்குறியை “பல்லஸ்” என்றார்கள், அது கிரேக்க கூறுலிருந்து பெறப்பட்டு, இலத்தீனில் “பல்லஸ்” ஆகியது. பேல் அல்லது பூல் என்ற இந்தோ-ஐரோப்பிய கூறுக்கும் தொடர்பு படுத்தப்பட்டது [Greek φαλλός = Latin phallus,, which is ultimately a derivation from the Proto-Indo-European root *bʰel– “to inflate, swell”]. ஹெர்மிஸ் [Hermes] என்ற கிரேக்கக் கடவுளுடன் இது தொடர்பு கொண்டதாக, கிரேக்கப் புராணங்களை சொல்கிறார்கள். “ஹெர்ம்” [Herm] என்றால் தூண் அதனால், ஆணுறுப்பு நீண்டு கொண்டிருக்கும் நிலையை “பல்லஸ்” என்று குறிப்பிட்டார்கள். ஆணுறுப்பு போன்ற உலோகத்தினால் ஆன விக்கிரகத்தை சங்கிலியால் தொங்கவிடப்படும் நிலையில் ரோமாபுரி நகரமான போம்பெய் [Pompeii] என்ற இடத்தில் கிடைத்துள்ளன. காற்றில் மணிசத்தம் கேட்கும் தொங்கல்களிலும் [wind chimes / tintinnabula] அத்தகைய உருவங்கள் காணப்படுகின்றன. ஹெர்மிஸின் மகன் பான் [Pan] என்பவன் எப்பொழுதுமே, ஒரு பெரிய ஆண்குறியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளான்.  இத்தகைய சித்திரங்கள், கவிதைகள், சிலைகள், விக்கிரகங்கள் முதலியவற்றைப் பார்த்தால், அம்மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[1].

anasyrma-04

கிரேக்கரோமானிய ஆண்குறி வழிபாடு, விழா முதலியன: பிரியாபஸ் [Priapus] என்ற இன்னொரு கிரேக்கக் கடவுளும் அவ்வாறே சித்தரிக்கப் படுகிறான். “லென்ட்” என்ற கிருத்துவ சடங்கின் போது, கிரேக்க நகரமான டிர்னவாஸ் [Tyrnavos] என்ற இடத்தில் வருடாந்திர “பல்லஸ் விழா” நடைபெறுவதுண்டு. அதாவது, கிருத்துவம் இடைக்காலத்தில், பல நாகரிகங்களிலிருந்து, கடன் வாங்கிக் கொண்டு வளர ஆரம்பித்த போது, அந்நிலையில் தான் இருந்தது. ரோமானிய நாகரிகத்தில் இது “பாசினம்” [fascinum] என்ற உருவத்தில் இருந்தது. ரோமானிய சிறுவர்கள் “புல்லா” என்ற தாயத்தை வயதுக்கு வரும் வரை அணிந்திருந்தார்கள். “புனிதமான பல்லஸ்” கன்னித்தன்மைக்கு, பெண்மைக்கு, உடலுறவிற்கு பாதுகாப்பு என்றும் அத்தகைய சின்னங்களை வைத்துக் கொண்டார்கள், பூஜித்து வந்தார்கள். இவை கிருத்துவ மதத்திலும் தகவமைத்துக் கொண்டனர். கிருத்துவமதத்திற்கு எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லாததால், பாபிலோனிய-எகிப்திய-கிரேக்க-ரோமானிய கதைகளோடு, பைபிள் கதைகளை இணைத்து, புதிய கட்டுக்கதைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இதனால், மேரி எப்படி வேண்டுமானாலும் இருப்பாள், இருக்கலாம் என்று மடத்தனமாகச் சித்தரிக்க ஆரம்பித்தனர்.

A Greek woman carrying a big phallus.

கிரேக்க நிர்வாணம், நிர்வாண சிலைகள், கொக்கோக கவிதைகள் முதலியன:  கிரேக்க நிர்வாணம், நிர்வாண சிலைகள், கொக்கோக கவிதைகள் அவர்களை அடக்கியே வாசிக்க வைத்தது. புரோபர்டியஸ் (Probertius), ஓவிட் (Ovid), டையோமெடிஸ் (Diomedes) முதலியோரின் கொக்கோக கவிதைகள் திகைக்க வைத்தன. ஆண்-உறுப்பை அப்படி தத்ரூபமாக வடித்துள்ளது ஏன் என்று திகைத்தார்கள். கிரேக்க இலக்கியங்களை “காமெடி” மற்றும் “டிராஜெடி” என்ற பிரித்த நிலையில், இவற்றை “காமெடியில்” வைத்தனர். அதே போல பெண்-உறுப்பையும் சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதையும் தயக்கத்துடன் மறைத்துள்ளனர். இதனால் தான், அக்கவிதை எண்ணங்கள் சிற்பங்களிலும் வெளிப்பட்டன. இடைக்காலத்தில் அத்தகைய உறுப்புகளின் சிலைகள், சின்னங்கள் முதலியவற்றை திருஷ்டி பரிகாரத்திற்கு, தீயதை விலக்க வைக்கப்பட்டன என்ற விளக்கத்தையும் கொடுத்தனர். சிலர் அவையெல்லாம் பேய்-பிசாசுகள் ஓட்டுவது போன்ற முறையுடன் சம்பந்தப்பட்டது என்று விளக்கம் கொடுத்தனர். ஆண்-உறுப்பு சின்னங்கள் தாம் அத்தகைய சக்தியைக் கொண்டிருந்தன என்றால், பெண்-உறுப்பு சின்னங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா என்று சில ஆராய்ச்சியார்கள் கேட்கத்தான் செய்தார்கள்.

An Old Babylonian clay plaque on display at The Israel Museum depicts a couple having sex

செக்ஸ்பாலியல், தெய்வீக விபச்சாரம் முதலியன: பெசபடோமிய நாகரிகத்திலும் செக்ஸ் என்பது வெளிப்படையாகவே இருந்தது. விபச்சாரத்திற்காக இளம் பெண்கள் சந்தைகளில் விற்கப்பட்டனர். தவிர புண்ணிய / தெய்வீக விபச்சாரம் என்பதும் இருந்தது. இஸ்தர்-இனன்னா-இன்னம்மா கோவிலில் [temple of Ishtar (Inanna)] உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் ஒரு முறையாவது, அங்கிருக்கும் நபர் தேர்ந்தெடுக்கும் போது, அவருடன் உடலுறவு கொள்ள வேண்டும். இத்தகைய முறைதான் பிறகு, கிருத்துவத்தில் கான்வென்ட், கன்னியாஸ்திரி, ஏசுவின் மனைவிகள் போன்றவற்றில் மாறின என்று எடுத்துக் காட்டப்படுகிறது. ரோமானியர்களுக்கு செக்ஸ் / பாலியல் என்பது வாழ்க்கையின் அங்கமாக இருந்தது. ரோமானியர்களின் அத்தகைய புராதன தொகுப்பை ஒரு ரகசிய அறையில் [secret cabinet (gabinetto segreto)] வைத்திருந்தனர். இப்பொழுது அது நேப்பிள்ஸின் தேசிய அகழ்வாய்வு அருங்காட்சியகத்தின் [Naples National Archaeological Museum] பகுதியாக உள்ளது. 1819ல் பிரான்சிஸ் I [King Francis I of Naples] தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து பார்த்தபோது திகைத்து அதனை பூட்டி வைக்கும்படி ஆணையிட்டார். இங்கிலாந்து அரசி லண்டன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் போதும், இதே போல நடந்தது. அப்பொழுது, நிர்வாண சிற்பங்களையெல்லாம் இலை போன்றவற்றை வைத்து மறைத்தார்கள்.

persian-sex-poetry-illustrated-Vedaprakash

இஸ்லாமிய செக்ஸ், பாலியல், கொக்கோகம் முதலியன: இஸ்லாமிய நாடுகளில் நடந்தவற்றை விளக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, ஏனெனில், உருவ வழிபாடு கூடாது என்ற ரீதியில் அவர்கள் பெரும்பாலான ஆதாரங்களை அழித்துவிட்டனர். அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்ற மூன்று பெண் குழந்தைகள் அல்லாவுக்கு இருந்ததாக குரான் மற்றும் ஹதீஸ் நூல்கள் குறிப்பிடுகின்றன. இதைத்தவிர, மொஹம்மது நபி வீனஸை வழிபட்டு வந்தார் போன்ற குறிப்புகள் உள்ளன. மெக்காவில் உள்ள பெண்ணுறுப்பு போன்ற உருவத்தை முந்தைய வழிப்பாட்டின் எச்சமாகவே கருதப்படுகிறது. இடைகாலத்தில், கொக்கோக நூல்கள் இஸ்லாத்தில் தான் அதிகமாக எழுதப்பட்டன. போரிட்டுக் கொண்டே இருந்ததால், வீரர்களுக்கு பிடித்து வந்த பெண்கள் காமப்பசிக்கு இரையாக்கப் பட்டனர். பிறகு, தனிப்பட்ட அந்தப்புரம், ஹேரம் போன்றவை உருவாக்கப் பட்டன. சந்தையில் பெண்கள் விற்கப்பட்டன, அவர்கள் ஹேரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதனால், கொக்கோக வாழ்க்கையின் சந்தோசங்கள், இன்பங்கள், உறவுகள் பற்றி, மேன்மேலும் இலக்கியங்கள், சித்திரங்கள் உருவாக்கப்பட்டன. இன்றளவிலும், இஸ்லாத்தின் தாக்கம், இவ்விவகாரங்களில் எல்லைகளைக் கடந்து தான் செயல்பட்டு வருகின்றது.

© வேதபிரகாஷ்

29-08-2016

Ithyphallic Priapus coin - 193-21 CE

[1] Stewart, Peter. “Hallett The Roman Nude. Heroic Portrait Statuary 200 BC–AD 300. Pp. xxii+ 391, ills. Oxford: Oxford University Press, 2005. Cased,£ 80. ISBN: 978-0-19-924049-4.” The Classical Review (New Series) 57.01 (2007): 221-223.