Archive for the ‘காம-இச்சை’ Category

ஆண்குறி வழிபாடும், லிங்க வழிபாடும் – I

திசெம்பர் 31, 2009

ஆண்குறி வழிபாடும், லிங்க வழிபாடும் – I

திருமணத்திற்கு வெளியே செக்ஸ்: ஐரோப்பிய நாடுகளில், கிருத்துவம் பலாத்காரமாகத் திணிப்பதற்கு முன்பு, மக்கள் இல்லறம் மற்றும் இல்லறம் அற்ற வாழ்க்கையினைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தனர். அனால் “இல்லறம்” என்ற நிலை, அங்கு தட்பவெப்பக்  காரணிகளால் மாறுபட்டு இருந்தன. அதாவது “வீட்டு தர்மம்” என்று அவர்கள் பெரிதாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்வது சாதாரணமான நிகழ்வாகக் கருதப் பட்டது இல்லை. அத்தகை நிலையில் தங்களது எண்ணப்பதிவுகள் கவிதையாக, சித்திரமாக, சிற்பமாக வெளிப்பட்டபோது, அதன் தாக்கங்கள் வெளிப்படையாகவே இருந்தன. கிரேக்க-ரோமானிய நாகரிகங்கள், தாம் அழிந்தாலும், தமது எஞ்சிய சின்னங்களிலும், அகழ்வாய்வு அத்தாட்சிகளிலும் அத்தகைய விவரங்கள் பதிந்து கிடப்பதன் மூலம் அறியலாம்.

கிரேக்கரின் நிர்வாணம்! டெக்ளி அகஸ்தாலிக்கு (இத்தாலியில்) செல்லும் வழியில் பாம்பேயில்(Pompei, via Deglki Augustali) உள்ள ஒருவீட்டின் சுவரில் ஆண்குறி சிற்பம் காணப்படுகிறது. இது எதோ ஒரு காக்கும் சின்னம் மாதிரி சதுரம், செவ்வகம் மற்ற வீடு போன்ற வடிவங்களின் நடுவே காணப்படுகின்றது. ஒரு ஆண்குறி-இரு விரைகளுடன் “Hic habitat felicitas” என்ற சொற்களுடன் காணப்படுகிறது[1].

phallus_-1

La felicidad

ஓவிட் (Ovid) மற்றும் லூஸியன் (Lucian) கவிதைகள்: இத்தாலி மொழியிலுள்ள அத்தகைய இலக்கியத்தை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்து எந்த ஆசிரியரும் தமது மாணவனுக்கு விளக்க முடியாத அளவிற்கு அந்த காமக்கவிதைகள் இருந்தன. ஓவிட் (Ovid) மற்றும் லூஸியன் (Lucian) போன்றவர்களின் அத்தகைய கவிதைகள் அலசப்பட்டன. பல “காமலீலைகள் புரியும் முறைகள்” என்ற செயல்முறை புத்தகங்களும் (Sex Manuals) விவரமான படங்களுடன் இருந்தன. உதாரணத்திற்கு பாக்ஸமோஸ் என்பவரின், “காதல் செயல்களில் 12 வகையான கலைகள்” (Twelve Arts of the actions of Love by Paxamos). தூண்டுதல் முறைகள், நிலைகள் முதலியனவற்றை விளக்கும் ஓவிடின் “அர்ஸ் அமதோரியா” (Ars Amatoria) போன்ற துணைபாட நூல்களும் (guides) இருந்தன. ஆனால், இந்நூல்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள்[2] எடுத்துக் காட்டுகின்றனர்!

Ovid's Amores

கிரேக்க நாகரிகத்தைப் புகழ்ந்து எழுதி, இந்தியர்களின் மீது திணித்து, இந்தியர்களும் அவ்வாறே அவர்களைப் பற்றி கருத்துருவாக்கம் செய்து கொண்டு, ஆஹா, கிரேக்கர்களுக்குத் தான் என்ன அறிவு, இந்தியர்கள் அவர்களிடமிருந்து கலைகள், விஞ்ஞானங்களைக் காப்பி அடித்து, திருடி பிறகு தான் தனது ஞானத்தைப் பெருக்கிக் கொண்டனர், என்றெல்லாம் இன்று வரை எழுதி வருகின்றனர். ஆனால், ஒரு கிரேக்க மாணவனுக்கே, கிரேக்க விளையாட்டு வீரர்கள் ஏன் அம்மணமாக ஓடினர், விளையாடினர் அல்லது தத்துவ ஞானிகளும் அவ்வாறே இருந்தனர், உரையாடினர், விவாதித்தனர் என்று சரித்திரத்தைச் சொன்னால், புரியாது முழிப்பான் அல்லது வெட்கப்படுவான் அல்லது அத்தகைய நிலை இன்று இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பான்[3].

அதுமட்டுமன்றி அவர்கள் குளிப்பதும் வெளிப்படையாகவே வெளியிடங்களில் குளித்தனர்! ஆண்களின் நிர்வாணம் (male nudity) மட்டுமன்றி, பெண்களின் நிர்வாணமும் (female nudity) வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாம் நூற்றாண்டு BCE அளவில், இந்நிலை ஏற்பட்டது. மேலும் இன்று
சிம்போசியம் (Symposium), ஜிம்னேஸியம் (Gymnasium), ஜைனேஸியம் (gynaecium) என்றெல்லாம் குறிப்பிட்டால், ஆஹா, இதெல்லாம் அறிவுஜீவிகள் விஷயம் போன்றுள்ளனவே என்று இன்று நினைக்கலாம்.

ஆனால், இவற்றில் கலந்து கொள்பவர்கள் நிர்வாணமாக இருந்தனர் என்ற உண்மையினைச் சொன்னால், அவ்வாறு இன்று அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப் படுமா என்ற கேள்வி எழும்!

ஜிம்னோ (gymno) என்ற கிரேக்கக்கூறு ஜும்னோஸ் (jumnos) என்றாகி அம்மணம், நிர்வாணம், உடையில்லாத நிலை, என்ற பொருளில் வரும். இதைப் பற்றி அலசும் படிப்பு / தத்துவம் ஜிம்னோசோஃபி (Gymnosophy) எனப்படும்.
“ஜிம்னோபிஸ்ட்”டுகள் (gymnophists) என்றால் ஆடையின்றி திரிபவர், முற்றும் துறந்த சந்நியாசிகள் என்று அறியப் படுகின்றனர். அலெக்ஸ்சாந்தர் “இந்தியாவிற்கு” வந்தபோது, இத்தகைய நிர்வாண சாமியார்களப் பார்த்ததும் “அலேக்காக”த் தூக்கிக் கொண்டு சென்று விட்டான் என்று நமக்குச் சொல்லப்படுகிறது! இதன் பின்னணியை இந்தியர்கள் நிச்சயம் அறிய வேண்டும்.

1.      அலெக்ஸ்சாந்தர் மற்ற கிரேக்கர்கள் எப்படி நிர்வாணமான குதிரைகளின் மீது ஓட்டிக் கொண்டு வந்தனர்?
2.      அவர்களும் நிர்வாணமாக இருந்தனரா இல்லையா?
3.      அலெக்ஸ்சாந்தர் “ஓரினச்சேர்க்கையாளன்” என்பதனால் நிர்வாண சாமியார்களப் பார்த்ததும் “அலேக்காக”த் தூக்கிக் கொண்டு சென்று விட்டானா?
4.      அவன் பல பெண்களுடன் உறவு வைத்திருந்ததன் மர்மம் என்ன?
5.      தாயுடனே சம்பந்தப் படுத்தும் விவரங்களும் உண்டு. அதன் மர்மம் என்ன?
6.      எப்படி, ஏன் அவன் “கடவுளாக்க”ப் பட்டான்?

இந்த கேள்விகளுக்கு பதில்களைப் பெற்றால், பல உண்மைகள் வெளிவரும். இதைத் தவிர, அவன் “இந்தியாவிற்கு” வரவில்லை, தோற்று ஓடி, போகும் வழியிலேயே மாண்டுவிட்டான் என்பதேல்லாம் இங்கு விவரித்தால் பெருகும்[4]. சமீபத்தில் வந்த அலெக்ஸ்சாந்தர் படம் இவ்விவரங்களைக் கொண்டிருந்ததால், கிரேக்க மக்கள் எதிர்த்தனர்.

பலவகையான நிர்வாணங்கள்: சிம்போசியம் (Symposium) என்றால் இரவு உணவிற்குப் பிறகு பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் குடிக்கும் வழக்கம் / விழா ஆகும் (ancient Greek after-dinner drinking-party with music, dancers; or conversation – OED, 1931, p.1240). சுருக்கமாகச் சொல்வதென்றால் “இரவு தண்ணிப் பார்ட்டி”. பிறகுதான், தத்துவம் பொன்ற விஷயங்கள் அலசப்பட்ட இடம் என்று மரியாதையான் பொருள் புகுத்தப்பட்டது! (இன்றும் அதுதான் நடக்கிறது என்பது வேறு விஷயம்).

ஜிம்னேஸியம் (Gymnasium) என்றால் உடற்பயிற்ச்சிக் கூடம். இங்கும் கிரேக்கர்கள் நிர்வாணமாகத்தான் பங்கு கொள்வர். உதாரணத்திற்கு Palaestra scene என்ற சிற்பத்தைப் பார்க்கவும்[5].

நிர்வாண “ஜேயஸ்”யை இங்கு பார்க்கலாம்:

Zeus from Artemisium[6] (c.5th cent. BCE)

Apollo, Ibid.p.120;

https://i0.wp.com/www.livius.org/a/greece/artemisium/artemision_zeus_nam2.JPG https://i0.wp.com/www.sandanart.com/images/a-ApolloLykeios.jpg

Artemes of Ephesus – Goddesses of fertility showing many breasts,
Ibid, p.129.
Hermes, Ibid.133
Head of Aphrodite, Ibid, p.143, p.144, p.145
Eros and Psyche, Ibid, p.147
Eros,Ibid, p.148
Poseiden, p.150
Three Graces p.150
Attis, p.170 உடையணிந்திருந்தாலும், நடுபகுதியை விலக்கி ஆண்குறியைக்காட்டும் நிலை
Hercules p.190 இலை மாதிரி ஒன்று செய்யப்பட்டு ஆண்குறி மறைக்கப்பட்டுள்ளது. 131 முழு நிர்வாணம்
Castor and Pollux p.227

கிரேக்கக் கடவுளர்கள் – ஆண்-பெண், இருபாலரும் மிகவும் அதிகமாக, தாராளமாக மற்றும் அளவிற்கு மீறிய செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டனர் என்று கிரேக்க இலக்கியங்கள் கூறுகின்றன.

அப்ரோடைட்ஸ் (Aphrodites) செக்ஸின் கடவுள்.  “aphrodisiasic” என்றால் காமத்தைத் தூண்டி உடலுறவு கொள்ளச் செய்யும் காம-இச்சை (veneral, producing veneral desire). வீனஸ் (Venus) என்ற பெண்கடவுள் குறிக்கப்படும். இதிலிருந்து பல சொற்கள் பெறப்படும், அவையெல்லாம் செக்ஸ் சம்பந்தமாகவே இருக்கும். இவ்வாறு கிரேக்கர்கள் நிர்வாணத்துடன் அறிவிஜீவிகளாக இருந்ததை இந்தியர்களுக்குச் சொல்வதில்லை. ஆனால், நிர்வாண கிரேக்கர்களிடமிருந்து ஆடைக்கட்டிய இந்தியர்கள் எல்லா கலை- விஞ்ஞானங்களையும் காப்பி அடித்தனர் என்று எழுதிகின்றனர்!

நிர்வாணம் உடைக்க / மறைக்கப்பட்டது: ஆகவே, நிர்வாண உலகில், ஆண்குறி-பெண்குறி அவர்களது நினைவுகளை ஆக்கரமித்து, சித்திரங்களாக, சிற்பங்களாக மாறியது வியப்பில்லை. அவர்களைப் பொறுத்த வரைக்கும் உடலியல் மற்றும் ஆன்மீகவியல் ரீதியில் வித்தியாசம் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால், கிருத்துவம் திணிக்கப்பட்ட பிறகு, அத்தகைய “நிர்வாணம்” வேறு விதமாகத் தோன்றியது மர்மமில்லை, ஏனெனில், அவை தமது இறையியலை பாதித்தனால் மறைக்க ஆரம்பித்தனர். அத்தகைய மறைப்பு வேலைகள் தாம் அழிவு வேலைகளில் நிறைவேறியது. பாம்பேயில் அகழ்வாய்வின் போது அத்தகைய பல சிற்பங்கள் உடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆண்குறிகள் இரண்டு விரைகள் கூடிய சிற்பங்கள் மேடைமீது பிரதானமாக வைக்கப்பட்டிருந்தன. டெலோஸ் என்ற இடத்தில் உடைந்த நிலையில் இருந்த அவை “விசித்திரமான சிற்பங்கள்” எனக் குறிப்பிடப் பட்டன.

கிருத்துவர்களின் ஆரம்பகால நிர்வாணம்: கிரேக்கத்திலிருந்து பைபிள், தத்துவங்கள் முதலியப் பெற்று இறையியலை வளர்த்து அவ்வாறே அவர்கள் கடவுளர்களையும் தமதாக மாற்றிக் கொண்டதால், பிற்பாடு, ஏசு, மேரி முதலியோர் நிர்வாணமாக இருந்தது பயத்தை உண்டாக்கியது. ஆகையால் தான் அத்தகைய சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மாற்றமுடியும் என்ற நிலையில் உள்ளவை மாற்றப்பட்டன. அதாவது, உடைகள் உடுத்தியிருந்தது மாதிரி மாற்றி செதுக்கப்பட்டன; நிர்வாண ஓவியங்களில் அவற்றை மறைத்து தீட்டப்பட்டன.

இருப்பினும் “டின்டின்னாபுலா” (tintinnanabula) என்ற உலோகத்தால் செய்யப்பட்ட தொங்கும் மணிகள் அப்பட்டமாக ஆண்குறியை பிரதானமாக வைத்து வார்க்கப்பட்டது தெரிகின்றது. ஆண்குறியை மெல்லிய சங்கிலி தாங்குகிறது; அதிலிருந்து மணிகள் தொங்குகின்றன; ஆண்குறியே மீன், சிங்கம் மற்ற விலங்குகளின் பின்பகுதி உருவம் (இரண்டு கால், ஒரு வால்) கொண்டு, முன்பகுதி ஆண்குறியாக உள்ளது; அல்லது, ஒரு மனித ஒருவமே தொங்கவிடப்பட்டு, அவனது ஆண்குறி பெரிதாக செய்யப்பட்டு அதிலிருந்து மணிகள் தொங்கவிடப்பட்ட நிலை; இதைத் தவிர வாயினுள் உள்ளது மாறிய ஆண்குறிகள் (அவை முகமூடிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன);

பிறகு “பிரியாபுஸ்” (Periapus) பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற கிரேக்க சிற்பங்களுக்கும், இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், மற்ற சிற்பங்களில் (கடவுளர்களின் சிற்பங்களேயானாலும்) ஆண்குறி இயற்கையான அளவில் செதுக்கப் பட்டிருக்கும், ஆனால், “பிரியாபுஸ்” சிற்பத்தில் பெரிதாக / அளவிற்கு அதிகமான பரிமாணத்தில் இருக்கும், பிரதானமாகச் செதுக்கப்பட்டிருக்கும்! அதே மாதிரி மெர்குரியின் சிற்பங்களும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. மெர்குரி “கடவுளர்களின் தூதுவன்” என கருதப்படுகிறான். இச்சிற்பங்கள் சுட்டமண், உலோகங்களினால் செய்யப்பட்டவை. இவற்றை போர்கியா, நேப்பிள்ஸ், லௌரே, பாம்பேய் முதலிய மியூஸியங்களில் / அருங்காட்சியகங்களில் காணலாம்!

© வேதபிரகாஷ்

31-12-20009


[1] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982, p.72.

[2] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982, p.5.

[3] John Mouratidis, Associate Professor of Physical Education, “The Origin of Nudity in Greek Athletics“, Journal of Sport History, Vol. 12, No. 3 (Winter, 1985). For full text, see at:
http://www.la84foundation.org/SportsLibrary/JSH/JSH1985/JSH1203/jsh12…

[4] K. V. Ramakrishna Rao, The Truth about Alexander, for more details, see at: http://www.hinduwebsite.com/history/alexander.asp
…………………., The Myth, Romance and Historicity of Alexander and their alleged influence on India, for more details, see at: http://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[5] C.E. Robinson, Everyday life in Ancient Greece, Oxford at Clarendon, UK, 1936, p.112

[6] Robert Graves (Int.), Larousse Encyclopedia of Mythology, Paul Hamlyn, London, 1964, p.104